பக்கம்:தனி வீடு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தனி வீடு

வரைக்கும்கூட இருப்பது இல்லை. ஒரு கணத்தில் மாயும் இன்டத்திற்கு வாழ்நாளில் பெரும்பகுதியைச் செல. வழிக்கும் இயல்பு அந்த மனத்திற்கு இருக்கிறது.

சின்னப் பூவில் உள்ள சிறிய தேனே உண்ணுகின்ற வண்டை நோககி, கான் ஆனந்தமாகிய தேனைச் சொரியும் ஒரு மலரைச் சொல்கிறேன். அங்கே போய் ஊது. வாயாக' என்று மணிவாசகர் சொல்கிருர், சிறகை. அடித்துப் பறந்துபோய்க் கொஞ்சம் கொஞ்சம் தேன் தரும் பூவை காடுவதை விட்டு அந்தத் தேனே நாடினல் அதைக் காணும்போது இன்பம் கிடைக்கும். அதைப் பற்றிப் பேசும்போது இன்பம் கிடைக்கும். கனக்கும். போதே இன்பம் கிடைக்கும். எப்போதுமே அந்தத்

தேனின் இன்பத்தைப் பெற்லாம்' என்று சொல்கிருர்.

மலரில் உள்ள தேன், உடம்புக்குள் மிக மெல்லிதாக இருக்கும் காவின் நுனியை மாத்திரம் சுவைக்கச் செய்யும். ஆல்ை அம்பலத்தில் ஆடுகிற ஆண்டவனின் திருவடியாகிய மலரில் உள்ள தேன் உடம்புக்குள் மிக்க வலியனவாகிய எலும்புகள் முழுவதும் உள் நெகிழும்படி செய்யும். எலும்பை உருக்குகின்ற நோய் அன்று; புறத்தே தோன்ருத வகையில் உள்ளுக்குள்ளே உருகி இன்ப உணர்ச்சி பெறும்படியாக அந்தத் தேன் செய்யுமாம். மனத்தை வண்டாக வைத்து மணிவாசகர் பேசுகிருர். ஆனந்தத்தேன் சொரியும் குனிப்பு உடையான் என்று நடராஜப் பெருமானச் சொல்கிருர். மலரில் உள்ள தேனை வண்டுகள் போய்க் கிண்டி உண்ணவேண்டும். இங்கேயோ தேன் உள்ள பூ ஆடிக்கொண்டிருக்கிறது. அதல்ை ஆனந்தத் தேன் சொரிந்துகொண்டே இருக்கிற தாம். ஏதேனும் வண்டு வந்தால் இங்கே தேன் உண்டோ இல்லையோ என்ற ஐயம் அடையாமல் வருவதற்கு முன்ன. லேயே தேன் தாரை ஒழுக வேண்டுமென்று கருதி மலர் ஆடிக்கொண்டிருப்பது போல, ஆண்டவன் தன் திரு. வடியை அசைத்து ஆடிக்கொண்டிருக்கிருன். h

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/100&oldid=575911" இலிருந்து மீள்விக்கப்பட்டது