பக்கம்:தனி வீடு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் 93

கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் சொல்கிருர், உடம்பினலே வணங்குவதற்குத் திருவுருவம் வேண்டும். மனத்தினலே கினேப்பதற்கும் வேண்டும். ஆகையால் இறைவனுடைய திருவுருவம் இப்படி இருக்கும் என்பதைச்

சொல்லவேண்டிய அவசியம் நேர்ந்தது.

அவனுடைய திருவுருவத்தை எப்படிச் சொல்வது? இறைவனே வழிபடும் கிலேக்கு ஏற்ற உருவங்கள் இல்லை என்ற சங்கடம் இல்லை. பல உருவங்கள் இருப்பதல்ை எதைச் சொல்வது என்ற சங்கடந்தான் எழுந்தது. சிங்க முகம் உடையவன் என்று சொன்னல் திருமாலேக் குறிக் கும். கொன்றையும் பிறையும் சூடிய கோலத்தைச் சொன்னல் சிவனைக் குறிக்கும். வேலையும் சேவலையும், சொன்னல் முருகனைக் குறிக்கும். ஆனே முகன் என்ருல் விநாயகனேக் குறிக்கும். நான்கு முகம், ஐந்து முகம் என்று சொல்லிக் கொண்டு போனல் வெவ்வேறு கடவுள் என் பார்கள். இப்படிப் பலவகை உருவங்கள் இறைவனுக்கு இருப்பதாக அன்பர்கள் போற்றி வணங்கும்போது, இவற்றினிடையே பொதுவாக உள்ளதைச் சொன்னுல் எல்லாவற்றையும் சொன்னதாக ஆகிவிடும். பொதுமை யில் அமைந்தது எது என்று வள்ளுவர் ஆராய்ந்தார்.

இந்தச் சங்கடத்தில் கடவுளுக்கு உருவமே இல்லை என்று சொல்லிவிடலாம் என்று தோன்றி இருக்கலாம். கண் னும் மனமும் படைத்த மனிதன் வணங்குவதற்குப் பெயரும் உருவமும் அவசியம் வேண்டுமென்ற தத்துவம் தெரிந்தவர் அவர். கடவுளுக்கு உருவம் உண்டு என்றும், அந்த உருவத்தை வணங்கவேண்டும் என்றும் சொல்ல எண்ணினர். எந்த உருவத்தைச் சொல்வது என்பதில் தான் சங்கடம் உண்டாயிற்று. -- -- -

பொதுவான அடிகள்

முகமும் வடிவும் வெவ்வேருக இருந்தாலும் எல்லா உருவங்களுக்கும் பொதுவாக இரண்டு அடிகள் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/103&oldid=575914" இலிருந்து மீள்விக்கப்பட்டது