பக்கம்:தனி வீடு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தனி வீடு

பாரத நிகழ்ச்சி

பஞ்ச பாண்டவர்கள் காட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஒர் ஆண்டு தலைமறைவாக இருந்துவிட்டு வெளி வந்தார்கள். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு உரிய நாட்டை மீட்டும் தங்களுக்குக் கொடுக் கும்படியாகக் கேட்டு வரும்படி தருமபுத்திரர் ஒரு முனி வரைத் துரியோதனிடம் தாது அனுப்பினர். அப்போது துரியோதனன் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. திருதராஷ் டிரன் அந்த முனிவரைப் பார்த்து, என் பிள்ளைகள் பொல்லாதவர்கள். தருமன் கல்லவன் ஆயிற்றே! அவன் எங்கே வாழ்ந்தாலும் அதுதான் அஸ்தினபுரம். இத்தனை ஆண்டுகளாகக் காட்டில் வாழ்ந்து பழகினவர்களுக்கு, அங்கேயே இருப்பதில் துன்பம் ஒன்றும் இல்ல்ை. எதற்காக மறுபடியும் இந்தப் பொல்லாத பிள்ளைகளோடு சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்?' என்று சொல்லி அனுப்பி ன்ை. அதனைக் கேட்ட தருமபுத்திரர், பெரியப்பா சொல்வது நியாயந்தானே? நாம் உறவினர்களோடு சண்டை போட்டுக் கொண்டு அவர்களே அழித்துவிட்டு ஏன் காட்டில் வாழ வேண்டும்? காட்டில் வாழ்ந்தால் நல்லதுதான்' என்று கூறினர்.

கண்ணபிரான் அவருடைய பேச்சைக் கேட்டான். சொல்வது சரிதான். ஆனால் உன்னுடைய தம்பிமார் கள் என்ன சொல்வார்களோ? அன்று திரெளபதியின் துகிலச் துச்சாதனன் உரிந்தபோது அவர்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு சபதம் செய்திருக்கிருர்கள். அவைகள் எல்லாம் முற்றுப் பெறவேண்டும். திரெளபதி தன் கூந்தலை விரித்துக்கொண்டு கிற்கிருள். அந்தக் கூந்தலை அவள் முடித்துக்கொள்ள வேண்டும். இவற்றைச் செய்யாமல் நீங்கள் மீண்டும் காட்டுக்குப் போய்விட்டால் உலகத்தில் உள்ளவர்கள் ஏசமாட்டார்களா?' என்று கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/108&oldid=575919" இலிருந்து மீள்விக்கப்பட்டது