பக்கம்:தனி வீடு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 00 தனி வீடு

வருவதோ உன்னுடைய நோக்கம் அன்று. பல காலத் திற்கு முன்னலேயே நிலமகள் உன்னிடம் வந்து அழுதாள். சுமை தாங்கவில்லை என்று அவள் முறையிட்டதைக் கேட்டு நீ பூபாரம் தீர்க்கவேண்டும் என்று எண்ணியிருக் கிருய். அந்த உண்மை எனக்குத் தெரியும்' என்ருன்.

போ ரதஅமரில் யாவரையும் நீருக்கிப்

பூபாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணு!” இதனைக் கண்ணன் கேட்டவுடன், பாரதப்போர் வராமல் ஏதாவது வழி இருந்தால் சொல்' என்று கேட் டான். அதற்குச் சகாதேவன் சொன்னன்:

பாராளக் கன்னன்இ கற் பார்த்தனை முன்

கொன்றணங்கின் - * காரார் குழல்களைந்து காலில் தளையூட்டி நேராகக் கைப்பிடித்து நின்னையும்யான் கட்டுவனேல் வாராமல் காக்கலாம் மாபா ரதமென்ருன் .'

துரியோதனனே, தருமனே அரசாள்வது என்று இல்லா மல் கர்ணன் அரசாள வேண்டும். அதற்கு முன்பு, அவன் அருச்சுனனைக் கொல்லவேண்டும். திரெளபதியின் கூந்தலே முடிப்பதா, விரிப்பதா என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் அவளது குழல்ேக் களையவேண்டும். பின்பு நான் உன்னைக் கட்டவேண்டும். இவை நடைபெற்ருல் பாரதப்போர் வராமல் காக்கலாம்' என்ருன்.

இப்படி வேறு யாராவது சொல்லி இருந்தால், காக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிருனே என்று தோன்றும். தமையன், மனேவி என்ற பற்றுக்களை விட்ட ஞானி சகாதேவன் ஒருவனல்தான் இப்படிப் பேசமுடியும். அவனுடைய உயர்ந்த நிலையைக் கண்ணபிரான் தெரிந்து கொண்டுதானே அவனத் தனியே அழைத்துக் கேட்டான்?

சகாதேவன் சொன்னதைக் கேட்ட கண்ணன் சிரித்துக் கொண்டான்; சொன்னது எல்லாம் சரி. ஒருகால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/110&oldid=575921" இலிருந்து மீள்விக்கப்பட்டது