பக்கம்:தனி வீடு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் - 1 05

பிறவிக்கு ஆதாரமாகிய செயல்களைச் செய்ய முயல்கிறது. அப்படியின்றி இறைவனுடைய திருவடித் தாமரையில் புகுந்து அங்கே துரங்கவேண்டும். அப்போது அதற்கு வேலை இல்லாமல் போய்விடும். கிறைந்த தேனை உண்ட வண்டு அந்தச் சுவையினல் மயங்கிப் போய், பறப்பதும் ஊதுவதும் இல்லாமல், அப்படியே தூங்குவது போல, மனம் இறைவனுடைய பாதாம்புயத்தில் துரங்கவேண்டும். அப்படித் துரங்கில்ை செயல் மாண்டு அடங்கிவிடும். செயல் மாண்டு அடங்குவதில் உண்டாகிற இன்பம் பேரின்பம். அதுதான் முத்தி. . . . . . . . . -

புத்தியை வாங்கிகின் பாதாம்புயத்தில் 45೬೪೨Turು. முத்தியை வாங்க அறிகின்றிலேன். . . . . .

இறைவனுடைய திருவடிகளைப் பாதாம்புயம் என்று

சொன்னமையில்ை அதன் கண்ணே புகுத்தும் புத்தியை வண்டு என்று கொள்ளவேண்டும். இப்படிக் கொள்வதை ஏகதேச உருவகம் என்று இலக்கணத்தில் சொல்வார்கள். புத்தியாகிய வண்டை முருகனுடைய பாதமாகிய தாமரை

யில் புகும்படி செய்ய வேண்டுமென்பதே அருணகிரி காதருடைய கருத்து. - - .. . . . .

(3) முத்தி நிலை

முத்தி அல்லது மோட்சம் என்பது சீட்டு வாங்கிக் கொண்டு பிரயாணம் செய்கிற இடம் என்று நினைக்கக் கூடாது. அது ஒருவகை கிலே. மாயாவிநோத மனே துக்க வாழ்வில் சிக்கித் திணறும் மனிதன் அஞ்ஞானத்தின் விகள. வாகிய செயல்களே விடுத்து, ஞான நெறியில் விற்கவேண் டும். அந்த கெறியில் கன்ருக கடந்து சென்று இந்திரியங் களே அடக்கவேண்டும். இந்திரியங்களுக்குத் தான் அடிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/115&oldid=575926" இலிருந்து மீள்விக்கப்பட்டது