பக்கம்:தனி வீடு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 08 தனி வீடு

கிறேன். இதனை மாற்றவேண்டும். என்னல் மாற்ற முடியவில்லை. என்னைத் தண்டித்து ஆட்கொள்ள மாட் டாயா?" என்று முறையிடத் தொடங்கினர் அருணகிரி நாதர். z - -

'தண்டிப்பதற்குரிய் அருமையான வேல் உன் திருக் கரத்தில் இருக்கிறதே! அதைக் கொண்டு தண்டித்து என்னத் திருத்த வேண்டும்' என்று முதலில் சொல்ல எண்ணினர். ஆனல் பிறகு அப்படிச் சொல்வது தவறு என்று தோன்றியது. உன்னுடைய வேல் மிகப் பெரிய தடையை நீக்குவதற்கு வேண்டும். அதைப் பிரயோகம் பண்ணுவதற்கு ஏற்ற தகுதி மிகப் பெரிய அசுரர்களுக்குத் தான் உண்டு. என் புத்தியைத் திருத்துவதென்று ே கினைத்தால் மிக எளிதில் ஆகிவிடும். இதற்கு உன்னுடைய வேலைப் பிரயோகம் செய்யவேண்டுமென்று கேட்பது தகுதியன்று. மிக்க பழைய சூரன் நடுங்கும்படியாக ே வைத்திருக்கும் அந்த வேலை வாங்குவதற்கு என் புத்தி தகுதி உடையதா?’ என்று கேட்கிரு.ர். . . . . . .

முது சூர் கடுங்கு அச் சத்தியை வாங்கத் தரமோ?

என் புத்தியை வசப்படுத்தி உன் பாத தாமரையிலே புகட்டி அன்பாய் முத்தியை வாங்கத் தெரியாத என் நிலையை மாற்றி ஒறுத்து ஆட்கொள்வதற்காக, உன் கையிலுள்ள சத்தியாகிய வேலை விடு அப்பா என்று நான் சொல்வேன். நீயும் என்னுடைய விண்ணப்பத்திற்காக வேலே விடுக்கத் தயங்கமாட்டாய். ஆனால் அது நியாய மான காரியம் ஆகுமா? சிறு முள்ளால் களைவதைக் கோடரியைக் கொண்டு களைவது முறையாகாது. அதல்ை எனக்கு நன்மை உண்டானலும் வேலுக்குப் பெருமை குறைந்துவிடும். அது சாமானிய வேலாயுதமா? அதன் பெயரைக் கேட்டாலே குரபன்மன் கடுங்கினன். அதனு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/118&oldid=575929" இலிருந்து மீள்விக்கப்பட்டது