பக்கம்:தனி வீடு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் 109.

டைய பெருமையைக் கந்தபுராணம் முதலிய நூல்கள் எவ்வளவு சிறப்பாகக் கூறுகின்றன! அத்தகைய பெரிய படையை எனக்கு உதவியாக விடவேண்டுமென்று கேட் பது முறை அன்று' என்கிரு.ர். -

அவன் திருவுள்ளம்

ஆனல் திருந்த வேண்டுமே; என்ன செய்வது? மலை தவிடு படும்படியாகத் குத்தியவன் முருகன்; சூரனைக் குத்தவும் கிரெளஞ்ச மலையைக் குத்தவும் பயன்படுத்திய வேலை உடையவன். அதற்கு இப்போது வேலை வைக்கக் கூடாது. பின்னே என்ன செய்வது என்ற எண்ணம் அருணகிரிநாதருக்குத் தோன்றியது. எம்பெருமான் என்ன ஆட்கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு இருக் கிறது. திருந்த வேண்டும் என்று எனக்கு உள்ள ஆவலக் காட்டி லும் அவனுக்குள்ள ஆவல் மிகுதியானது. என்னைத் திருத்து என்று கான் விண்ணப்பித்துக்கொண் டாலே போதும். இப்படித் திருத்து என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி எனக்கு இன்ன மருந்து கொடு என்று கேட்பது கியாயம் ஆகாது. இவனுக்கு இன்ன மருந்து கொடுக்கவேண்டுமென்பது மருத்துவனுக்குத் தெரியும். அதுபோல் ஆண்டவன் என்னைத் திருத்துவதற்கு ஒரு வழி வைத்திருப்பான்.. அதை அவனுடைய திருவுள்ளத்திற்கு விட்டுவிட வேண்டும் என்ற நினைவு. பிறகு வந்தது. முருகா, என்னத் திருத்துவதற்கு என்ன வழி நீ கினைத்திருக் கிருய்?' என்று கேட்கிரு.ர்.

குவடு தவிடுபடக் குத்திய காங்கேயனே! வினையேற்கு என் குறித்தனையே? இறைவனிடம் இன்னது வேண்டுமென்று அறிவிக்கும் இயல்பு பக்தர்களுக்கு இல்லை; எனக்கு இன்னது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/119&oldid=575930" இலிருந்து மீள்விக்கப்பட்டது