பக்கம்:தனி வீடு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - தனி வீடு

களோடு சண்டைக்குப் போய்த் திரிகின்ற அரசர்களுடைய செல்வம் எல்லாம் நீரில் எழுதிய எழுத்துப் போன்றவை என்பதை அறியாத பாவி நெடு நெஞ்சம் நம் நெஞ்சம்.

அமைதி தரும் செல்வம்

அவை உண்மையான செல்வமாக இருந்தால் மனத் திற்கு அமைதியும், மகிழ்ச்சியும் கொடுக்கவேண்டும். நன்ருக வாழ்வதற்குச் செல்வம் வேண்டுமென்ற நினைப் பிலே அதனே நிறையச் சேமித்துக் கொண்டிருக்கிறவர்கள் நன்ருக வாழ்கிருர்களா என்று சற்று ஆராய்ச்சி செய்தால் உண்மை விளங்கும். செல்வத்தைப் பெற்றவர்களுக்குத் திருப்தி உண்டாவதில்லை என்று முன்னரே சொன்னேன். அதனுல் குமரகுருபர முனிவர், செல்வம் என்பது சிங்தையின் கிறைவே' என்றும், அல்கா கல்குரவு அவா எனப் படுமே" என்றும் கூறினர். - -

மனத்தில் உண்டாகிற திருப்திதான் செல்வம், மேலும் மேலும் வேண்டுமென்ற ஆசையே வறுமை என்று அவர் சொல்கிருர். எத்தனே செல்வம் இருந்தாலும் அவன் செல்வகை வாழாமல், இன்னும் நமக்குப் போத வில்லையே' என்று ஏழையாகவே வாழ்கிருன். உலகம் ஏழை என்று கினைத்திருந்தாலும், நமக்குக் கிடைத்தது போதும். இறைவன் இந்த அளவுக்கு கம்மை வைத்திருக் கிருனே' என்று திருப்தியாக வாழ்கிறவர்களே மனத்தில் செல்வர்களாக இருக்கிருர்கள். செல்வம் சேரச் சேர

அவர்களுக்குக் கவலைகளும் சேர்ந்து விடுகின்றன. மனத்

தில் அமைதியைத் தராது என்பதை கன்ருகத் தெரிந்து. கொண்ட பெரியவர்கள் அதைத் தருகின்ற வேறு செல்வம் எது என்று ஆராய்ந்தார்கள். இறைவனது திருவருட் செல்வம் உலக வாழ்க்கையிலும் சிறந்த இன்பத்தைத் திரும் என்று கண்டு கொண்டார்கள். அதனைக் கண்டு கொண்டவரிலே அருணகிரிய்ாரும் ஒருவர், ள்து மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/134&oldid=575945" இலிருந்து மீள்விக்கப்பட்டது