பக்கம்:தனி வீடு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 34 தனி வீடு'

தாமே வலிந்து சென்று, இந்தா, இதைப் பெற்றுக் கொள்' என்று கொடுப்பது மிக உயர்ந்த இயல்பு.

கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று.' இனி இந்த உயர்ந்த இயல்புக்கு மேல் மற்ருேர் இயல்பைப் புலவர் பேசுகின்ருர். கொள் என ஒருவன் கொடுக்கும் போது, நான் இதனைப் பெற்றுக்கொள்ள மாட்டேன்' என்று மறுக்கிருனே, அவன் கொடுக்கும் உயர்ந்த குணம் படைத்தவனேவிடச் சிறந்தவன்.

கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று' என்கிருர் அந்தப் புலவர். கொள் என்று கொடுப்பவனுக்கு முன்னலே நின்று, கொள்ளமாட்டேன் என்று சொல் வதற்கு மனத்திண்மை வேண்டும்; நம்பிக்கை வேண்டும்; இறைவன் திருவருள் நமக்கும் ஒரு வழி காட்டும் என்ற உறுதி வேண்டும். * . . . " -

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை; யாண்டும் அ.தொப்பது இல்' ‘. . . . என்று வள்ளுவர் சொல்கிருர், கொடுப்பதை வேண்டாம் என்று சொல்கிறவன் ஒரு வகையில் செல்வகை விளங்கு கிருன். நம்மிடம் பணம் இருந்தாலும், மேலும் ஒருவன் கொடுத்தால் பணத்தின்மேல் பணத்தைச் சேர்த்துக் கொள்வதற்காக வாங்குகிருேம். அப்படி இருக்க, நம் முடைய வறுமை தெரிந்து ஒருவன் கொடுக்கிருன் என்ருல். அதனே மறுப்பது சாமானிய மனம் படைத்தவேைல இயலாது. அதற்கு ஒரு தனி மனத் துணிவு வேண்டும். ஆகையால் கொள் என்பதற்கு எதிரே கொள்ளேன் என்று சொல்வது மிகச் சிறந்த பண்பு என்று புலவர் சொன்னர்.

தொண்டர் பெரியர் இனித் தொண்டர்களைக் கவனிக்கலாம். அவர் களுக்கு அருட் செல்வம் நிரம்பியிருக்கிறது. பொருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/144&oldid=575955" இலிருந்து மீள்விக்கப்பட்டது