பக்கம்:தனி வீடு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை 137

இத்தகைய தொண்டர்களிடையே சார்ந்தால் காம் பெறவேண்டிய கதி கிடைக்கும் என்று அருணகிரியார் சொல்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தம்மிடம் இருப்பது போதாமல், வேண்டும் வேண்டும் என்று மேலும் பிறரிடம் உள்ள செல்வத்தை இரந்து ஈட்டியும், தம் மிடத்துள்ள பொருளேக் கரந்து வைத்துக் கொடுக்காமல் பாதுகாத்தும் சுற்றித் திரியும் மனிதர்களுடைய இயல்பைப் பார்த்து ஏமாந்து போகிற நெஞ்சுக்கு அறிவுறுத்துகிருர்.

நிறைவு பெறச் செல்வம்

ஆசை உண்டாகிவிட்டால் எவ்வளவு செல்வத்தைக் குவித்தாலும் திருப்தி உண்டாகாது. திருப்தி உண்டாகி விட்டால் எவ்வளவு சிறிய அளவில் பெற்ருலும் அதுவே போதும் என்ற மன அமைதி உண்டாகிவிடும். அந்த அமைதியை உண்டாக்கிக் கொள்வதற்குச் செல்வம் காரணம் ஆகமாட்டாது. அவ்வமைதியைக் குலேப்பதற்கு வறுமையும் காரணம் ஆகமாட்டாது. இறைவன் திரு வருள் பெற்றவர்களுக்கு வறுமை, செல்வம் ஆகிய இரண் டிலும் மன அமைதி இருக்கும். ஆகவே, தேர், கரி, பரி ஆகிய செல்வத்தைக் கண்டு ஏமாந்து போகிற நெஞ்சமே! அவைகள் எல்லாம் நீரில் எழுத்துப் போல மாய்ந்து விடுமே! இதனை நீ உணர்ந்திலேயே உண்மையான அருட் செல்வத்தைப் பெற்றவர்கள் கூட்டமாகக் கூடுவார்கள். அவர்களேச் சார்ந்தால் மன நிறைவு பெறலாம். வேறு யாரைச் சார்ந்தாலும் அந்த நிறைவு கிடைக்காது. தொண்டர் குழாத்தைச் சாரின் அன்றி வேறு கதியே இல்லை' என்று அருணகிரியார் உபதேசம் செய்கிருர்

சார்பில்ை வரும் சிறப்பு

ஒரு மனிதனுடைய குணத்தை அவனுடைய சார்பை உணர்ந்து தெரிந்து கொள்ளலாம். * உன்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/147&oldid=575958" இலிருந்து மீள்விக்கப்பட்டது