பக்கம்:தனி வீடு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 தனி வீடு நண்பர் இன்னர் என்று சொல். உன் இயல்பைச் சொல் கிறேன்' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. காமாக முயற்சி செய்து நன்மை பெருவிட்டாலும் சார்பின் வலிமையினால் பெறலாம். அதுபோல் நல்ல குடியில் பிறந்து, நல்ல பழக்கம் உள்ள மக்களோடு வாழ்பவன் மாறிப் போய்த் தீயவர்களோடு பழகினல் தீமையும் அவர் விரும்பாமல் அவனேச் சார்ந்துவிடுகிறது.

தேரும், கரியும், பரியும் கொண்டு காட்டை விரிக்க வேண்டுமென்றும், பொருளே விரித்துக்கொள்ள வேண்டு மென்றும் எப்போதும் திரிந்து கொண்டிருக்கிற அரசர் களைச் சார்ந்தால் நமக்கும் நம்முடைய பதவியையும், செல்வத்தையும் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்ற கினேவே உண்டாகிறது. அரசன் வேறு ஓர் அரசைேடு ப்கை கொண்டால் நாம் நம்மைப் போன்ற வேறு ஒரு மனிதனோடு பகை கொள்ள வேண்டுமென்ற நினைவு உண் டாகிவிடுகிறது. அவன் ஒரு காட்டைக் கைப்பற்ற வேண்டுமென்று கினைத்தால் நாம் ஒரு வீட்டைக் கைப் பற்ற வேண்டுமென்று நினைக்கிருேம். அவனும் தம் எண்ணம் கைகூடவில்லேயே என்ற கவலையினல் துரங்கா மல் இருக்கிருன்; நாமும் அப்படியே இருந்துவிடுகிருேம். கடைசியில் அவன் ஈட்டுகின்ற செல்வம் நீரில் எழுதிய எழுத்துப் போல மறைந்துவிடுகிறது. நாம் ஈட்டிய செல்வமும் அப்படியே மறைந்து விடுகிறது. நீர்ல் பெரி தாக எழுதலாம்; சிறிதாக எழுதலாம். இரண்டும் அழிந்து போகின்றன. அரசன் ரதகஜதுரகபதாதிகளேக் கொண்டு பெரும்போர் செய்து சேர்த்துக் கொள்கிற செல்வம் ஒரு கணத்தில் தன்னுடையது என்று சிறிதும் இல்லாமல் அவன் வறியவன் ஆகிவிடுகிருன். -

  • குடைகிழ விருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

நடைமெலிங் தோரூர் நண்ணினும் கண்ணுவர்' என்பது அரிய உண்மை. அப்படியே செல்வத்தைச் சேர்த்து வாழ்ந்தாலும் அந்தச் செல்வத்தை நுகர்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/148&oldid=575959" இலிருந்து மீள்விக்கப்பட்டது