பக்கம்:தனி வீடு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை 1 39

நாம் இந்த உடம்போடு இருக்கப் போவதில்லை. செல்லும் நிலையாதது என்பது மட்டும் அன்று. இந்த வாழ்க்கை நிலைக்குமா? அதுவும் கிலேயாமல் இருப்பதே. செல்வம் எல்லாமே கிலேயாதன செல்லும் தன்மை உடையன. ஒரு கால் நம்மை விட்டு நீங்காமல் இருப்பதாக இருந்தாலும் நாம் அந்தச் செல்வத்தை விட்டுப் போகின்ற நிலை வந்து விடும். இறந்து பட்டால் நம் வீடு, நம்முடைய நாடு, நம்முடைய செல்வம் எல்லாம் பிறருடையவை ஆகிவிடு கின்றன. விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றை விட்டு நாம் செல்லத்தான்வேண்டும். . . .

அருட் செல்வம்

ஆதலின் எல்லாக் காலத்தும் உதவுகின்ற, உயி ரோடு ஒட்டி வருகின்ற, செல்வமாகிய அருட் செல்வத் தைச் சேர்த்துக்கொண்டால் எல்லாக் காலத்தும் குறை வின்றி நிறைவான இன்பத்தைத் தரும். அந்தச் செல்வத் தைத் தம்முடைய காணியாக்கிக் கொண்டவர்கள் தொண் டர்கள். அவர்களேச் சார்ந்தால் எல்லா இடத்திலும் எந்தப் பிறவியிலும் கவலையில்லாமல் வாழ இயலும். இதனை எண்ணியே, தொண்டர் குழாம் சாரில் கதியன்றி வேறிலே காண்’ என்று அருணகிரியார் சொன்னர்,

(4)

இனி, யாருடைய கொண்டர் என்ற விவுைக்கு விடை சொல்கிரு.ர். -

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம் சாரில் கதி அன்றி வேறு இ?ல காண்.

- பதவியும் பணமும்

'குரபன்மன் ம்ேலும், கிரௌஞ்ச மலையின் மேலும் ஒளி விடுகின்ற வேலை எறிந்தவன் என்று முருகப் பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/149&oldid=575960" இலிருந்து மீள்விக்கப்பட்டது