பக்கம்:தனி வீடு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் அந்தச் செயல்களே மாற்றுகின்றன். தங்களுக்கு ஆக்கிக் கொள்கின்றன. இதனை அருணகிரிநாதர் முன் ஒரு பட்டில் சொன்னர். - -

'ஓர ஒட்டார் ஒன்றை உன்ன ஒட்டார் மலர் இட்டு,

உனதாள் - சேர ஒட்டார் ஐவர்; செய்வதென் யான்?’’ - என்ற பாட்டில் காம் செய்கின்ற செயல்களுக்குக் குறுக்கே கின்று ஐந்து பேர்கள் தடுக்கிருர்களே என்று புலம்பி இருக்கிருர். வேறு ஒரு பாட்டில், இந்த வீட்டைக் கட்டி கான் குடியிருப்பதற்காக நீ கொடுத்திருந்தாலும் இந்த வீடு எனக்குச் சொந்தமாகாமல் ஐந்து இந்திரியங்கள் ஆகிய பகைவர்களுக்குச் சொந்தமாக இருக்கிறதே!' என்பதைத் தெரிவித்திருக்கிரு.ர். - - -

"ஐவர்க்கு இடம்பெறக் கால்இரண்டு ஒட்டி, அதில்

இரண்டு, கைவைத்த வீடு' - . என்று சொல்கிரு.ர். -

இப்படி ஐந்து பொறிகளின் வயப்பட்டு மனம் செல்ல, அதன் வழிப்பட்டு நம்முடைய வாழ்வு அமைகிறது. ஐந்து பேர்களுக்கு நடுவில் வாழ்கின்ற வாழ்வு எப்போதும் துன்பங்தான். எலி வளையானலும் தனி வளை வேண்டும் என்பது ஒரு பழமொழி. தனியாக ஒரு வீடு கட்டிக் கொள்ள வேண்டுமென்ற தாபம் எந்தக் குழந்தைக்கு இருக்கிறதோ அந்தக் குழந்தையின் ஆவலைப் போக்கு வதற்கு எப்பெருமான் கருணை புரிவான். இந்தச் செய்தி களே எல்லாம் கினைந்து தம்முடைய அநுபவத்தை அருண

கிரியார் சொல்கிருர். - -

அந்த வீடு "எங்கள் பெருமாகிைய முருகன் கான் பூதம் தங்கிய விட்டில் குடியிருப்பதை அறிந்து கருணை செய்தான். இந்த வீட்டில் கான் இருக்கிறேனே என்று பல காலம் வருந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/17&oldid=575828" இலிருந்து மீள்விக்கப்பட்டது