பக்கம்:தனி வீடு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தனி வீடு

இரு கோட்டு ஒரு கைப்பொரு யூதரம் உரித்து, ஏகாசம் இட்ட புராந்தகற்குக் குருபூத வேலவன் கிட்டுர சூர குலாந்தகனே.

இரண்டு கொம்புகளும் ஒரு கையும் உடைய, போர் செய்கின்ற மலை போன்ற யானேயின் தோலை உரித்து, அந்தத் தோலேயே மேல்ே போர்வையாகப் போர்த்துக் கொண்டவன் அவன்: திரிபுரத்தை அழித்தவன். -

சிவபெருமான் செய்த பல வீரச் செயல்களுக்குள் முக்கியமானவை எட்டு. அந்த எட்டு வீரச் செயல்களையும் அவன் செயததை கினேப்பதற்குத் தமிழ்நாட்டில் எட்டுத் தலங்கள் இருக்கின்றன. வீரத்தைப் புலப்படுத்தும் அத் தலங்களுக்கு வீர ஸ்தானம் என்று பெயர். அதுவே பின்பு வீரட்டானம் என்றும் வீரட்டம் என்றும் மாறி வந்தது.

ஒவ்வொரு வீரட்டத்திலும் சிவபெரும்ான் செய்த ஒவ் வொரு வீரச்செயலின் கினைப்பை உண்டாக்கும் அடை யாளங்கள் இருக்கின்றன. அந்த எட்டு வீரட்டானங்கள் ஆவன. 1. திருக்கண்டியூர்: பிரமன் சிரம் கொய்தது. 2. திருக்கோவலூர்: அந்தகாசுரனேச் சங்கரித்தது. 3. திருஅதிகை: திரிபுரத்தை எரித்தது. 4. திருப்பறிய லூர்: தக்கன் சிரம்.கொய்தது. 5. திருவிற்குடி சலந்தரா சுர்னேச்சங்கரித்தது. 6. வழுவூர்: யானையை உரித்தது. ?. திருக்குறுக்கை: காமனை எரித்தது. 8. திருக்கடவூர்: யமன உதைத்தது. இவற்றை அட்ட வீரட்டம் என்பர்.

ஆமன் சிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை

மாமன் றியல், சலந்தான் விற்குடி, ம்ாவழுவூர், காமன் குறுக்கை, யமன்கடவூர், இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையுந்திங்களுஞ் சூடிதன் -

சேவகமே ' ' ' , " ... . . . . - என்பது في باتايته ستتى இன்னவை என்பதைச் சொல் . கிறது. சிவபெருமான் புரிந்தருளிய எட்டு வீரச் செயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/22&oldid=575833" இலிருந்து மீள்விக்கப்பட்டது