பக்கம்:தனி வீடு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 - தனி விடு

என்று சொன்னதாக முடியும். அத்தகைய பெருமானுக் குக் குருமூர்த்தியாக வந்தவன் முருகப் பெருமான்.

வேலவன்

குரு உருவத்தில் வந்தவன் வேலாயுதம் படைத்த பெருமர்ன்.

. இருகோட்டு ஒரு கைப்பொரு யூதரம் உரித்து

ஏகாசம் இட்ட புராந்தகற்குக் குருபூத வேலவன். ஆணவத்தை ஒழித்து, மலத்தை நீக்கும் எம்பெருமானுக்கு ஞானம் வரும்படியாகச் செய்தவன் முருகன் என்பது. உயர்வு நவிற்சியாகத் தோற்றலாம். உலகுக்குத் தன் தகுதியைக் காட்டுவதற்காகச் செய்கின்ற திருவிளை யாடல்கள் அவை. ... . . . . . . . . . . . .

திரிபுராந்தகனுக்குக் குரு உருவில் வந்தவன் வடிவேற் பெருமான் என்று சொன்னர் அருணகிரிநாதர். சிவ பெருமானப் பல வகையில் புகழ்ந்துவிட்டு அவனுக்குக் குருவாக இருக்கும் தகுதி முருகப் பெருமானுக்கு உண்டு என்பதைக் குறிப்பாக உணர்த்துகிருர். முருகன் ஞான குருவாக வந்தவன். அதற்கு அடையாளமாகத் திருக் கரத்தில் வேலை வைத்திருக்கிருன். அது ஞான சொரூபம். அவன் ஞான உபதேசம் செய்கின்ற தேசிகன் என்பதைக் காட்டுகின்றது. ஆகையால் குருபூத வேலவன் என்று

அடையாளம் சொன்னர்.

குர குலாந்தகன்

. . . ஞான உபதேசம் செய்பவகிைய அவன் அஞ்ஞானம்

முழுவதையும் அழிப்பான். அந்த ஆற்றலும் முருகப் பெரு

மானிடத்தில் இருக்கிறதென்பதைப் புராணத்தைக் காட்

டியே சொல்கிருர் அருண்கிரிநாதர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/26&oldid=575837" இலிருந்து மீள்விக்கப்பட்டது