பக்கம்:தனி வீடு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு 23

கிருர்கள்: அது விளையாட்டு. ஆனல் அந்த வாணத்தைக் கூரைக் குடிசையில் ஒரு குழந்தை செருகி விட்டால் அது விளையாட்டு ஆகுமா? அதல்ை பெரிய வினே உண்டாகிவிடு கிறது. இதற்குக் காரணம், அந்தக் குழந்தை யிடத்தில் குழந்தைத் தன்மை இல்லாமல் பொல்லாங்கு இருப்பதே." அத்தகைய குழந்தைகளைப் பெற்ற தாய் தந்தையர்கள் அவர்களே வெளியில் விடுவதற்கே அஞ்சுவார்கள். பைத் தியம் பிடித்த குழந்தை ஒன்று இருக்கிறது. அது செய்கிற காரியங்களை விளையாட்டு என்று சொல்லலாமா? கையில் எதை எடுத்தாலும் வீசுகிறது; அடித்துக் கொள்கிறது. அதல்ை அதற்கும் தீங்கு உண்டாகிறது; மற்றவர்களுக் கும் உண்டாகிறது.

மனம் என்னும் குழந்தையும் கல்ல இயல்போடு இருந்தால் அது செய்வன விளையாட்டாக இருக்கும்; அதல்ை நமக்குத் துன்பம் வராது. ஆனல் பெரும்பாலான மனக்குழந்தைகள் பொல்லாத குழந்தைகள், பைத்தியம் பிடித்த குழந்தைகளாக இருக்கின்றன. அந்தக் குழந்தை யின் கையில் ஐந்து கத்திகளைக் கொடுத்திருக்கிருன் ஆண்டவன். ஐந்து இந்திரியங்களான கத்திகளே வைத்துக் கொண்டு இந்த மனம் என்னும் குழந்தை பிரபஞ்ச மேடை யில் விளையாடத் தொடங்கினல் அது எத்தனே பேரைக் கொலை செய்யும் என்று கணக்குச் சொல்ல முடியாது. எவ்வளவோ பேருக்குக் காயத்தை உண்டாக்கும். எத்தனையோ பேர்களிடத்தில் அடி வாங்கும். -

ஆகவே, விளையாட்டாக இருந்தாலும் வினையாக முடி பவை சில. குழந்தை செய்வதால் விளையாட்டு என்று சொல்ல வேண்டுமே யொழிய, அந்தச் செயலால் நிகழும் துன்பங்களே எண்ணினல் அது விளையாட்டு ஆகாது. குழந்தை குரங்காகிவிட்டால் விளையாட்டு வினையாகி விடும். - ; : . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/33&oldid=575844" இலிருந்து மீள்விக்கப்பட்டது