பக்கம்:தனி வீடு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இருவகை விளையாட்டு 35

அந்த மயல் எனக்குத் துயரத்தைத் தந்து நேர்மையாக வாழவும், உறுதியோடு கிற்கவும் வலு இல்லாமல் செய்து விடுகிறது; துவட்சியைத் தருகிறது. நான் என்ன செய் வேன்! என்று புலம்புகிருர். -

காமத்தால் பற்றப்பட்டவர்கள் துவண்டு வீழ்கிருர் கள். துவளுவதுபோல அறிவு மாறி வீழ்கிருள்கள். நல்லது செய்ய வேண்டுமென்ற கினேப்பு இருந்தாலும் அதனைச் செய்வதற்கு உடம்பு இடம் கொடுப்பது இல்லை. நல்ல தைப் பேச முடிவது இல்லே. -

காமத்தின் வலிமை -

மனிதனுக்கு உண்டாகின்ற நோய்களுக்குள் மிகவும் கொடியது காமநோய். அதனே மாய்ப்பதற்கு மன வலிமை அதிகமாக வேண்டும். காமம் என்ற சொல்லுக்கு ஆசை என்பதுதான் பொருள். மற்ற ஆசைகள் எல்லாவற்றை யும்விட வலியதாகப் பெண் ஆசை இருப்பதல்ை காமம் என்றவுடன் பெண் ஆசை என்ற நினைவே உண்டாகிறது. சில பொதுப் பெயர்கள் சிறப்பாக உள்ள பொருள்களைக் குறிப்பது உண்டு. ஈசுவரன் என்பது பொதுவான பேராலுைம் சிவபெருமானேக் குறிக்க வழங்குகிருேம். பூ என்று தாமரைப்பூவைக் குறிப்பது உண்டு. இத்தகைய சொற்கள் பல பொருளுக்குப் பொதுவான பெயராக இருந் தாலும் அந்தப் பொருள்களுக்குள் சிறப்பானவற்றைக் குறிப்பிடுவது மரபு. அதுபோல் காமம் என்ற சொல் எல்லா ஆசைகளுக்கும் பொதுவான பெயராக இருந்தாலும் அவைகளுக்குள் மிகவும் வலிய பெண்ணுசையைச் சிறப் பாகக் குறிக்கும். அப்படிக் குறிக்கும் வழக்கத்தினலேயே

காமத்தின் கடுமையும் வலிமையும் நன்கு விளங்கும்.

ஆகையால் அருணகிரியார் மாயா விநோத மனே துக்கத்தின் விளைவாகப் பல இருந்தாலும் மங்கையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/45&oldid=575856" இலிருந்து மீள்விக்கப்பட்டது