பக்கம்:தனி வீடு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு 41

வர்சகருக்கு ஓடிவந்து அருள் செய்தான். முதலில் தன்னு டைய திருவருளேப் பெருமல் உலகத்தில் அலைய வைத்த வன் அவன்தான். உலகத்தில் ஆசையைப் பெருக்கி ஊனேக் கொண்டு நாடகம் ஆடும்படி அவரைச் செய்தவன் அவனே. பின்பு அந்த ஆசை மாய, ஞான நாடகம் ஆடச் செய்தவனும் அவனே. - -

ஊ?ன நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனைப் பருகவைத்தவா!'

இதற்கு முன்னல் இந்த ஊகிைய உடம்பை நீ விளை யாடச் செய்தாய்; நாடகம் ஆடுவித்தாய். நான் அப்போது ஆடினேன். புண்ணிய பாவங்களைக் காரணமாக வைத்து அவற்றிற்குரிய பிறவியை எனக்குக் கொடுத்து இன்ப துன்பங்களை அடையும்படியாக செய்தாய். அந்த ஆட்டத்திலேயே கான் பற்றுக் கொண்டிருந்தேன். இப் போது திருவருளால் அந்த நாடகத்தை மாற்றிய்ை. உன்னே நினைக்கச் செய்து உன்னையே நான் பருகும்படி யாகத் திருவருள் பாலித்தாய். இது என்ன வியப்பு! நீ ஆனந்த மயமானவன். நான் உருகி அந்த ஆனந்தத்தைப் பருகினேன். அதற்குக் காரணமாக ஞான நாடகத்தை ஆடும்படியாகச் செய்தாய். ஊன நாடகம் ஆடும்போது வளர்ந்து வந்த வைய ஆசை, ஞான நாடகம் ஆடும்போது நைந்து போயிற்று' என்கிரு.ர். - -

- மாயா விநோத மைேதுக்கத்தில் துன்புற்ற அருண கிரிநாதரும் சித்ர மாதரிடத்தில் ஆசை வளர்ந்து உருகினர். சிற்றின்பம் பருகினர். அந்த ஆசை பெருகியது. மணி வர்சகர் சொல்லும் ஞான நாடகமாகிய இன்ப விளையாட் டிலும் உருக்கம் இருக்கிறது; பெருக்கம் இருக்கிறது. மணிவாசகர் சொல்கிற ஊன நாடகமே, மாயா விநோத மாகிய மாயை விளையாட்டு. அவர் சொல்கிற ஞான நாடகமே ஞான விநோதமாகிய ஞான விளையாட்டு. o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/51&oldid=575862" இலிருந்து மீள்விக்கப்பட்டது