பக்கம்:தனி வீடு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் - 4.7

இல்லை. அதனால் ஏமாற்றம் அடைகிருேம். இந்த ஏமாற்றத்தால், பேரின்பம் என்ற ஒன்று நம் முயற்சில்ை கிடைப்பது சந்தேகம்' என்ற நினைவு தோன்றிவிடுகிறது.

மிகவும் படித்தவர்கள் கூடப் பேரின்பம் என்பது வெறும் கற்பனை என்று தம்முடைய மனசில் கினைத்துக்கொண் டிருக்கிருர்கள். பேரின்பத்தைப், பற்றியும் கடவுளேப்

பற்றியும் பிறருக்கு விரிவாக எடுத்து உரைக்கும் பலர் தம்

முடைய சொந்த வாழ்க்கையில் அவற்றில் நம்பிக்கை வைத்திருப்பவர்களாகத் தோன்றுவது இல்லை. சொல்வது ஒன்று, அநுபவிப்பது ஒன்ருக அவர்களுடைய வாழ்க்கை நடைபெறுகிறது ஏட்டுச் சுரைக்காய் போலப் பிறருக்கு உபதேசம் செய்யும் வகையில் அவர்கள் பெரியவர்கள்

எழுதிய நூலே எடுத்துச் சொல்கிருர்கள். ஆனல் அவர் களுடைய உள்ளத்தில் அவற்றில் சிறிதும் நம்பிக்கை இருப்பதில்லை. மெத்தப் படித்தவர்களே கம்பிக்கை கொள்ளாமல் இருப்பார்களானல், அவர்களே அப்படி ஆக்கும் மாயா சக்திக்கு எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டுமென்பதை கினேந்து பாருங்கள். அவர்களுக்கு நம்பிக்கை வராததற்குக் காரணம் இறைவனுடைய திருவருள் கிடையாமையே. - -

கண்டறியாதன கண்டேன்!

பல பல முயற்சி செய்து இறைவனுடைய திரு வருளைப் பெற வேண்டுமென்று வருந்திய பலர் இந்த நாட் டில் இருந்திருக்கிருர்கள். தம்முடைய முயற்சியினலே பேரின்பத்தைப் பெற்றதாகச் சொல்லாமல், அவனு' டைய திருவருளால் பெற்றேன்' என்று சொன்ன பெரு மக்களே பலர். நம்மைப்போல வாழும் காலத்தில் அவர் கள் கண்டு அறியாத தனி இன்பத்தை இறைவன் திருவருளேப் பெற்ற பிறகு அட்ைகிருர்கள். அப்போது

அவர்களுக்கு உண்டாகும் வியப்பு:அளவிட முடியாதது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/57&oldid=575868" இலிருந்து மீள்விக்கப்பட்டது