பக்கம்:தனி வீடு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தனி வீடு

கண்டறியாதன கண்டேன்' என்று அப்பர் சுவாமிகள் சொல்கிருர்;

தேடிக் கண்டுகொண்டேன்'

என்று பெரு மகிழ்ச்சியோடு கூறுகிருர்.

காணுதலாவது அநுபவித்தல். கண் முதலிய ஐந்து புலன்களாலும் அநுபவிக்கின்ற அநுபவங்களைக் காணு. தல் என்று சொல்வது வழக்கம். இந்திரியங்களின் நுகர்ச்சிக்கு உட்பட்ட அநுபவத்தைப் பிரத்தியட்சப் பிர மாணம் என்று சாஸ்திரம் கூறும். அதையே கண்கூடு என்று தமிழில் சொல்வார்கள். காற்றுக் குளிர்ச்சியாக இருப்பதைக் கண்டேன்' என்று குளிர்ச்சியாக வீசும் போது நுகர்ந்த நுகர்ச்சியைச் சொல்வதுண்டு. அப்படி நாவுக்கரசர், கண்டு கொண்டேன்' என்று வீறுடன் பேசுகின்ருர். இறைவனே அவர் அநுபவித்தாராம். :எப்படிக் கண்டார்?' என்ற கேள்வி எழும். அந்தக் கேள்விக்கு அவர் விடை சொல்லவில்லை. ஆனல் பல இடங்களில் அவர் கூறி இருக்கும் அநுபவச் செய்திகளே. எல்லாம் தொகுத்துப் பார்த்தால் இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். நமக்குக் கேள்வி கேட்கத் தெரிகிறதே யொழிய அதற்கு விடை எங்கே இருக்கிறதென்று கண்டிபிடிக்கும் ஆர்வம் இல்லே. அந்த ஆர்வம் இருந்து, நாமும் அந்த இன்பத்தைப் பெற வேண்டுமென்ற பசியும் இருந்தால், நிச்சயமாக ஆண்ட வன் அருள்பெற்ற பெரியவர்களுடைய திருவாக்கிலே நம்முடைய கேள்விக்கும் ஐயத்திற்கும் உரிய விடைகளைக் காணலாம். - -

முறைகள் பல

இறைவனுடைய திருவருள் பெற்ற பெருமக்கள் பலரும் தாம் பெற்ற அநுபவத்தை விம்மிதத்தோடு பேசி இருக்கிருர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சொல்லி இருக்கிருர்கள். இப்படி வெவ்வேறு வகையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/58&oldid=575869" இலிருந்து மீள்விக்கப்பட்டது