பக்கம்:தனி வீடு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தனி வீடு

அநுபவம் ஒன்றே

- அவர்கள் வெவ்வேறு வகையில் இறைவனுடைய திருவருளைப் பெற்ருலும் அவர்கள் பெற்ற இன்ப உணர்ச்சி பொதுவானது; அது ஒன்றே. இதற்கு ஒர் உதாரணம் சொல்லிப் பார்க்கலாம். நம்முடைய வீட்டில் தித்திப்பான பண்டத்தைப் பலகாரத்திற்குப் பண்ணி யிருக்கிருர்கள். இன்றைக்கு முருகனுடைய விரதம், சஷ்டி. எல்லோரும் பலகாரம் பண்ண வேண்டும்' என்று சொல்லி ஏதோ இனிப்பான பண்டத்தைச் செய்திருக் கிருர்கள். முருகனுடைய அடியார்கள் வீட்டில் அன்று பலர் இனித்த பலகாரத்தைச் செய்கிருர்கள். நூறு வீட்டில் நூறு விதமாகச் செய்கிருர்கள். ஒரு வீட்டில் செய்த பலகாரம் மற்றெருவர் வீட்டில் இல்லை. ஒரு வீட்டில் ஜிலேபி, மற்ருெருவர் வீட்டில் ஹல்வா, பின் ஒரு வீட்டில் லட்டு என்று பல வகையாகச் செய்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ் வேறு உருவத்தில் இனிப்புப் பண்டத்தை உண்டாலும் அவர்கள் அறிந்த சுவை இனிமை என்பதுதான். அது போல, இறைவனுடைய திருவருளேப் பெறும் வழி வெவ் வேருக இருந்தாலும், இறைவனச் சந்தித்த முறை வெவ் வேருக இருந்தாலும், அவர்கள் திருவருளே உணர்ந்து பெற்ற இன்பம் ஒன்றுதான். அவரவர்களுடைய உபாசன முறைக்கும், குருவின் உபதேச வகைக்கும், சாதனத்தின் தன்மைக்கும் ஏற்ப அவர்களுக்கு அநுபவம் வருகிறது; வழி அமைகிறது. வெவ்வேறு உருவங்களை வழிபட்டாலும் முடிந்த முடிவான அநுப்வம் எல்லோருக் கும் ஒன்றுதான். எத்தகைய உணவை உண்டாலும் பசி இருகிற அநுபவம் எப்படி ஒன்ருே, அதுபோலவே எந்த வகையில் உபாசன செய்தாலும் தியானம் பண்ணிலுைம் இறைவன் திருவருளால் பெறுகின்ற இன்பம் ஒன்றுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/60&oldid=575871" இலிருந்து மீள்விக்கப்பட்டது