பக்கம்:தனி வீடு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தனி விடு

ஆண்டவன் உருவோடு தோன்றில்ை, மயில் வாகனப் பெருமானுகத் தோன்றுவான். அவனிடத்தில் வேல் தோன்றும். கோழி தோன்றும். விநாயகரை உபாசன பண்ணுகிறவர்களுக்கு ஆனைமுகப் பெருமாகை ஆண்ட வன் தோன்றுவான். அம்பிகையைப் பூஜை செய்பவனுக் குத் திரிபுரசுந்தரியாக எம்பெருமாட்டி தோன்றுவாள்.

நம்முடைய உள்ளத்தில் எந்த மூர்த்தியாகிய விதை யைப் புதைக்கிருேமோ அதுவே பின்னல் விளைகிறது. வித்து என்பது மரம் தோன்ருத நிலையில் இருப்பது, விக்கிரகத்தை வைத்து உபாசன பண்ணுவது வித்தைப் புதைக்கிற மாதிரி. ஆனுல் வித்தைப் புதைத்தவன் சும்மா இருந்தால் அது விளையாது. அதற்கு நீர் விட்டு, உரமிட்டு, பலகாலம் பாதுகாத்து வந்தால் அந்த வித்துப் பெரியதாக விளேந்து மரமாவதைக் காணலாம். அப்படியே கோயில் களில் உள்ள மூர்த்தியைப் பார்த்து, பார்த்தபடியே கின்று விட்டால் ஒன்றும் பயன் இல்லை. அந்த மூர்த்தியை நம்முடைய உள்ளத்தில் புதைத்துத் தியானம் பண்ணி, அன்பு நீர் வார்த்து, வைராக்கியம் என்ற உரம் இட வேண்டும். அப்போது கோயிலில் கண்ட மூர்த்தி, இன்பம் மிக்க பெரிய உருவம் எடுத்துச் சோதி வடிவமாகத் தோன்றுவார். -- . -

விதையும் விளைவும்

பெரியவர்கள் கம்க்கு அளித்துள்ள உபதேச முறைப் படி நாம் வழிபடும்போது வழிகாட்டியாக விக்கிரகத்தை அல்லது படத்தை நாம் வைத்துக்கொண்டு உபாசன செய் கிருேம். அவர்கள் சொல்லித் தந்த தோத்திரங்களைப் பாடுகிருேம். இவை யாவும் வித்துப் போன்றவை. அவர் களிடமிருந்து நாம் பெற்றுக் கொண்டவுடனே பயன் உண்டாகுமென்று எதிர்பார்க்க முடியாது. வித்துக்கள் தாமே விளைவதில்லை. கடலே விதையை நமக்கு ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/62&oldid=575873" இலிருந்து மீள்விக்கப்பட்டது