பக்கம்:தனி வீடு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 55

வேதனேப்பட்டுக் கிடந்தேன். நான் மாத்திரமா அப்படி இருந்தேன்? இந்த இன்பத்திற்கு உறைவிடமாகிய இறைவனே மிகப் பெரியவர்களாகிய திருமாலும், நான் முகனும் தேடிக் காணவில்லை, அவர்கள் . காணவேண்டு மென்ற ஆசை உடையவர்களாக இருக்கிருர்கள். அதனல் தேடிக்கொண்டே இருக்கிருர்கள். அப்படித் தேடியும் தேடொணுத பெருமான் அவன், அவனே நானும் சில காலம் தேடினேன். கடைசியில் என்னுடைய உள்ளத் திற்குள் கண்டுகொண்டேன்' என்கிருர், . . . . . .

மற்றவ்ர்கள் எல்லாம் வெளியில் தேட நான் அப்படித் தேடும்போது அவனேக் காணவில்லை. பின்பு என்னுடைய கோக்கத்தை உள் முகமாக்கி என் உள்ளே தேடினேன். கான் எனக்கு மிகவும் நெருக்கமாக, என்னைக் காட்டிலும் எனக்கு இனியன் ஆக இருக்கிருன் என்று அப்போது கண்டேன்' என்று கினைக்கும்படியாக அந்தப் பாட்டு அமைந்திருக்கிறது. - - . . . .

(2) தித்தித்திருக்கும் அமுது அருணகிரிநாத சுவாமிகள் தாம் தேடிக் கண்டு கொண்டதை இந்தப் பாட்டில் சொல்கிருர், பேரின் பத்தைக் கண்டுகொண்டேன்; இதுவரைக்கும் நான் அநுபவித்து அறியாத பரமானந்த சாகரத்தைக் கண்டு கொண்டேன்' என்று துள்ளிக் குதிக்கிருர், எதைக் கண்டுகொண்டார் என்பதை அடையாளம் காட்டிச் சொல் கிருர். ஆறுமுகம் படைத்த ஒரு பெரிய அமுதை, தித்தித் திருக்கும் அமுதை, கண்டு இன்புற்றேன் என்று அவர் சொல்கிரு.ர். . . . . . . . . . . . .

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது கண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/65&oldid=575876" இலிருந்து மீள்விக்கப்பட்டது