பக்கம்:தனி வீடு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 63

தால் அப்போது எத்தனே சுகம் உண்டாகும் அப்படி இருக்கின்ற கிலேதான் மிகச்சிறந்த கிலே. சுத்தாவஸ்தையில் அதைச் சுஷ-சப்தி என்று சொல்வார்கள். அத்தகைய இன்பத்தை அடைந்தவர்கள் விழித்திருந்தாலும் அவர்கள் துரங்குபவர்கள் போன்றவர்கள். அவர்கள் மனம் வேலை செய்யாமல் இருக்கும். ..

குருடர்கள்

விழித்துக் கொண்டே துரங்குகிறவர்களேச் சகஜநிலை உடையவர்கள் என்று சொல்வார்கள். அது ஒரு வகைச் சமாதி; சகஜ சமாதி என்று பெயர். அத்தகையவர்களே,

விழித்த கண்குருடாத்திரி வீரர்'

என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது. கண்ணே விழித்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் குருடர்களாக இருக்கிருர்களாம். நாம் கண்ணே விழித்துக்கொண்டு பார்க்கிற பொருளே அவர்களும் பார்க்கிருர்கள். ஆல்ை அவர்கள் காணுகின்ற காட்சி வேறு; நாம் காணுகின்ற காட்சி வேறு. நமக்கு அவர்கள் குருடர்கள்; நாம் காணு கின்ற பொருள்களின் இயல்பை அவர்கள் நாம் காண்பது போலக் கண்டுகொள்வது இல்லை. அவர்களுக்கு நாம் குருடர்கள். காம் இருட்டில் உலவுகிருேம். அவர்கள் ஒளியில் உலவுகிருர்கள். தமக்கு என்று செயல் இல்லாமல் இருக்கின்ற அவர்களைச் செயல் மாண்ட பெரியவர்கள் என்று சொல்வார்கள். கர்த்திருத்துவம், போக் திருத்துவ மாகிய, செய்யும் தன்மை, நுகரும் தன்மை என்னும் இரண்டும் அவர்களுக்கு இல்லை. -

துன்பம் இல்லாத பயணம் அவர்கள் செய்கிற வினை ஒன்றும் இல்லை. அதல்ை புதிதாக வருகின்ற புண்ணிய பாவங்களும் இல்லை. திருவருளாகிய வண்டியில் ஏறிக் للاسلالة رقي له رتل مكة إي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/73&oldid=575884" இலிருந்து மீள்விக்கப்பட்டது