பக்கம்:தனி வீடு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தனி வீடு

மான ஞானத்தையே. அந்த ஞானத்தோடு அருள் கலந்து வரும். அந்த ஞானத்தோடு பக்தியும் கலந்திருக்கும். இறைவனுடைய திருவருள் கினேவின்றி வருகிற அறிவு பயன் இல்லாத அறிவு, மணம் இல்லாத மலர், ஈரம் இல்லாத வறண்ட பொருள். -

மனம் விரிந்தால் உள்ளத்தில் இருக்கிற பொருள் வெளிப்படுகிறது. புத்திக் கமலம் விரியும்போது அங்கே எம்பெருமான் இருப்பது புலகிைறது. புத்தியாகிய கமலத் தில் தேன் உருகிப் பெருகவேண்டும். அந்த உருக்கத்திற்கு மூலமானது அன்பு. இறைவனுடைய திருவருளைப் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டு, எம்பெருமானிடத்தில் இடையீடில்லாத அன்பு வைத்து, அந்த அன்பின் பயனுக அவனுடைய அருள் ஒளி கிடைக்குமானல், அப்போது உள்ளக் கமலம் விரிகிறது; விரியும்போது அவன் தன்னு டைய காட்சியைக் காட்டுகிருன். அப்போது மெல்ல மெல்ல நம்முடைய செயல் மாண்டு வருகிறது. அதற்குப் பயனக இன்ப ஊற்று மெல்ல மெல்லப் பெருகுகிறது.

ஊற்றும் மறைதல்

- இன்பம் கற்குக எழுந்தது. எப்போதும் ஊற்ருக ஒடிக்கொண்டிருக்கவில்லை. அது பெரிய கடல் ஆயிற்ரும். சிறிய விதை ஒன்றை எடுகிருேம். அந்த விதை இரண்டு இலே விடுகிறது. அதோடு நிற்பது இல்லை. அது மர மாகிறது. அது இலை விடும்போது தன்னை மாய்த்துக் கொள்கிறது. வித்து மாய்ந்து மரம் ஆகிறது. ஒரு தேங். காய் நடுகிருேம், கட்ட பிறகு நாம் தேங்காயை எடுக்க லாம். ஆனல் கட்ட தேங்காயை எடுக்க இயலாது. ஒரு தேங்காய் நட்டால் ஆயிரம் தேங்காய் வரும்; கட்ட தேங் காய் வராது. அது தன்னை மாய்த்துக் கொண்டு பல தேங், காயைத் தருகிறது. அப்படியே இங்கே புத்திக் கமலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/76&oldid=575887" இலிருந்து மீள்விக்கப்பட்டது