பக்கம்:தனி வீடு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 67

விரிகிறது. அதிலிருந்து ஊற்று ஊறுகிறது; புறப்பட்டு, வெள்ளமாகப் பெருகுகிறது; நான்கு புறமும் பெருகிக் கரை காணுமல் நிற்கிறது. வெள்ளம் பெருகப் பெருக அது செல்லும் இடங்களில் உள்ள பொருள்கள் மறையத் தொடங்குகின்றன. புறப்பட்ட இடமே மறைந்து போகி றது. புறப்பட்ட ஊற்றுக் கண்ணை மறைத்து, கரைகளே எல்லாம் மறைத்து, கரைகளுக்கு அப்பாலுள்ள மேடுகளே மறைத்து, மேடுபள்ளம் என்ற வேறுபாடு தெரியாமல் செய்து, எங்கும் ஒரே வெள்ள மயமாக நிற்கிறது. வெறும்

ஊற்ருக இருக்கும்போது ஊற்றுக் கண் தெரிந்தது; மற்ற

இடங்களும் தெரிந்தன; கரைகளும் தெரிந்தன; மேடு

பள்ளம் எல்லாம் தெரிந்தன. ஆனல் ஊற்று, கடல்ான

பிறகு ஒன்றுமே தெரியவில்லை. அப்படியே ஆனந்தத் தேன் ஊற்று எடுக்கும்போது மேடுபள்ளம் என்ற வேறு

பாடு சற்றே தோற்றலாம். ஆனந்தம் வெள்ளமாகப்

பெருகிப் பரமானந்தக் கடலான பிறகு முன்னலே கண்ட

கரை மேடு பள்ளங்களில் ஒன்றும் தெரியாது.

வர வாப் பெருகுதல்

இறைவனுடைய திருவருளால் அவனுடைய திரு வுருவத்தை உள்ளத்தில் பதித்து அறிவுப் பக்குவம் பெற்று அன்போடு கலந்து சாதனே செய்வோமானல் ஆனந்த ஊற்றுத் தோன்றும்; மேலும் மேலும் பெருகும். அப்படிப் பெருகி வரும்போது மெல்ல மெல்லப் பேத புத்தி, மாய்ந்து வரும், அருகில் இருக்கிற கரைகள் உடைந்து போகும்; பள்ளமும் போய்விடும். முன்பு என் மனைவி மக்கள், என் சொத்து என்று சொல்லிக்கொண்டிருந்தவன் என் என்பதை மறந்துவிடுவான். என் என்பது எம். ஆகிவிடும். வீட்டை நினைப்பதை மாற்றி ஊரை நினைப் பான். பின்பு ஊரையும் மறந்து காட்டை நினைப்பான். அதனையும் மறந்து உலகத்தையே கினேப்பான். அதற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/77&oldid=575888" இலிருந்து மீள்விக்கப்பட்டது