பக்கம்:தனி வீடு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தனி வீடு

கண்ணுக்குப் புலப்படாமல் செய்கின்றன. சிறிய விளக்கின் ஒளியில் எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் நெடுந்து ரத்திலுள்ள பொருள் தெரிவது இல்லை, பெரிய சோதிப் பிழம்பாகிய கதிரவன் ஒளிக்கு எல்லாப் பொருளை யும் விளக்கும் ஆற்றல் இருந்தாலும் தடுத்து கிற்கிற மறைப்புகளில்ை 5மக்குப் பொருள் புலப்படுவது இல்லை. அப்படியே மனம், உணர்வு ஆகிய தடை இருக்கும்போது இறைவனுடைய பேரருள் நமக்குப் பயன்படுவது இல்லை. சிறிய விளக்கை ஏற்றிப் பின்பு அந்த விளக்கே சோதி யானுல் நம் பார்வை விரியும். அதோடு அடைபட்ட மறைப்புகள் எல்லாம் அழிந்து ஒழியுமானல் மிக விரிந்த பரப்பில் நம்முடைய பார்வை போகும். சிறிய விளக்கு வைத்து வீட்டிலேயே வளைய வருவதுபோல நாம் திருக் கோயிலில் எம்பெருமான் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பார்க்கிருேம். அந்தச் சிறிய விளக்கே அநுபவத் தில் எல்லை இல்லாத சோதிப்பிழம்பாகத் தோன்றுகிறது. கண்டத்திற்குள் காணுகின்ற ஆறுமுக காதனைக் கோயிலில் காண்கிருேம். அகண்ட பரமானந்த வெள்ளத்தில் அகண்டமாக இருக்கிற ஆறுமுககாதனேக் காணலாம். இப்போது கம்முடைய கண்ணுக்கு இனிமையாக இருக்கிற உருவம் அப்போது நம்முடைய உயிருக்கு இனிமையாக இருக்கும். -

இந்த ஆறுமுகமும் பன்னிரண்டு தோளும் உடைய எம்பெருமானுடைய தரிசனத்தில் நாம் உள்ளக் கிளு. கிளுப்பு அடைகிருேம். ஆனல் அகண்டக் காட்சியிலே அருணகிரிநாதர் கண்ட ஆறுமுகநாதன் உயிருக்குள்ளே இன்பம் பாய்ச்சின்ை. சாவாத நிலை தந்தான். அதனல் அந்தத் திருவுருவத்தை அமுதம் என்று சொன்னர்.

தித்தித்திருக்கும் அமுது கண்டேன்.

அமுதம் என்பது மரணத்தை ஒழிப்பது. முன்னலே, சொன்னதுபோல தேவர்கள் உண்ட அமுதம் போன்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/84&oldid=575895" இலிருந்து மீள்விக்கப்பட்டது