பக்கம்:தனி வீடு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - தனி வீடு

தெளிவாகிறது. இழுக்கான செயல்களே நாம் செய்ய லாகாது என்று நமக்கு அப்போதே தெளிவு பிறந்திருக்கு மால்ை அவற்றைச் செய்திருக்க மாட்டோம். படிப்படி யாக இந்தத் தெளிவு உண்டாகிறது. படிப்படியாக நம் உள்ளத்தில் வாசனைப் படலம் ஏறிக்கொண்டு வந்திருக் கிறது. வினைகளும் மெல்ல மெல்ல கம்மிடத்தில் குவிங் திருக்கின்றன. அவற்றைப் போக்க வேண்டுமானல் மெல்ல மெல்லத்தான் போக்க வேண்டும். செயல்கள் மெல்ல மெல்ல அடங்கி வரும்போது அதன் பயனுக இன்பம் மெல்ல மெல்ல ஊறிப் பின்பு பரமானந்த சாகர மாக மாறும்.

அருணகிரிநாதப் பெருமான், செயல்கள் எல்லாம் அடங்கி நிற்க ஜீவபோதம் அற்று இறைவைேடு ஒன்று படுகின்ற ஆனந்த கிலேயை இந்தப் பாட்டில் சொல்கிருர், நமக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்றும், எட்டாத இடத்தில் இருக்கிற ஒன்றை நாம் பார்த்துக் கொட்டாவி விடுகிருேம் என்றும் நினைக்கக் கூடாது. நாம் அநுபவிப் பதற்கு ஒத்து வருகின்ற பழக்கத்தையும் இந்தப் பாட்டில் சொல்கிரு.ர். -

செயல் மாண்டு அடங்க" என்பதற்கு அடங்கி வர என்று பொருள் கொள்ளவேண்டும். முற்றும் அடங்கிய நிலையில் ஊற்றுத் தோன்றிய புத்திக் கமலம் மறைந்து எல்லாவற்றையும் ஒன்ருக்கிக் கொண்டு பரமானந்த வெள்ளம் தோற்றும். செயல் ஒவ்வொன்ருக மாளத் தொடங்கவே, இன்ப ஊற்றுப் பெருகி வரும். ஒன்று தேய்ந்து கொண்டு வருவதும், ஒன்று ஓங்கிக் கொண்டு வருவதும் சேர்ந்தே நிகழும். நாம் தொடக்க நிலையில் இருக்கிருேம். நம்முடைய செயல் தேய்ந்து வரவேண்டும். செயல் தேய்வது செயலைச் செய்யாமல் இருப்பது அன்று. பிறவிப்பிணிக்குக் காரணமான செயல்கள் அடங்கவேண்டு மால்ை அதற்கு மாற்ருன செயலைச் செய்யவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/88&oldid=575899" இலிருந்து மீள்விக்கப்பட்டது