பக்கம்:தனி வீடு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 83

வரிசை அமைந்திருக்கிறது. சூரியன் உதயம் ஆகி எல்லோ ருக்கும் இன்பத்தைத் தருவதுபோல இங்கே முதல் முகம் உதயமாகி இருளைப் போக்குகிறது; கடைசி முகம் வள்ளி யெம்பெருமாட்டிக்கு இன்பம் தருகிறது.

மூன்று iiථීක

இப்படி அழகாக அமைந்த ஆறு முகங்களையும் திரு. முருகாற்றுப்படையில் பார்க்கிருேம். அதைப் படித்து நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டால், கோயிலில் உள்ள முருகப் பெருமானுடைய திருவுருவத்தைக் காணும்போது அந்தச் செய்திகள் நம்முடைய கினேவுக்கு வரும். அந்தத் திருமுகங்களின் மூலமாக இந்த உயர்ந்த கருத்துக்கள் நம் உள் ளத்தில் படம்போலத் தோன்றும். தோன்ரு விட்டா லும் தோன்றும்படியாக நினேத்துப் பார்க்க வேண்டும். பக்தர்களுக்குக் கோயிலில் காணும் முகங்கள் மலராலும், அணியாலும் அலங்காரம் பண்ணப் பெற்றனவாக இருக்கும். திருமுருகாற்றுப்படையைப் படித்த பிறகு அந்த அலங்காரங்களைக் கண்ணுலே கானுவதோடு நில்லாமல் அவற்றின் செயல்களையும் கினைத்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இது இரண்டாவது கிலே, அது போல் மூன்ருவது கிலே ஒன்று உண்டு. அதுதான் பரமானந்த சாகரத்தில் அமுத மயமாக இந்த ஆறு முகங் களேயும் காணும் கிலே. . . . . . . . . .

இதனை அருணகிரிநாதப் பெருமான் அநுபவத்தில் உணர்ந்தார். இந்தப் பாட்டில் அதைச் சொல்கிருர்

பத்தித் திருமுகம் ஆறுடன்

பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கும் அமுதுகண்

டேன்செயல் மாண்டடங்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/93&oldid=575904" இலிருந்து மீள்விக்கப்பட்டது