பக்கம்:தனி வீடு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 . ." தனி வீடு

பெரியவர்கள் தம்முடைய துதியில் சொல்வது வழக்கம். இந்தப் பாட்டில் அருணகிரியார் பாதாம்புயம் என்று சொல்கிரு.ர். * - -

இறைவனுடைய திருவடி தாமரையைப் போல இருக் கிறது. இரண்டுக்கும் உள்ள பொதுத் தன்மைகள் பல. தாமரை மெத்தென்று இருப்பதுபோல இறைவனுடைய திருவடியும் மெத்தேன்று இருக்கிறது. இறைவனுடைய திருவடி தாமரையைப் போலச் சிவப்பாய் இருக்கிறது. அருணதள பாதபத்மத்தைத் திருப்புகழில் அருணகிரியார் சொல்கிருர். தாமரை மலர் தூயது: இறைவன் அடியும் தூயது. தாமரை மலர் மங்களம் பொருந்தியது; இறைவன் திருவடியும் அத்தகையதே. தாமரை மலர் குளிர்ச்சியாக இருக்கும் நீரில் முளைப்பது; அப்படியே இறைவனுடைய திருவடி அன்பு நிறைந்த பெரியவர்கள் உள்ளத்தில் முளைப்பது. தாமரை விரிவாக இருப்பது, இறைவன் திருவடியும் விரிந்திருப்பது. தாமரை மலர் பொய்கையில் எவ்வளவு நீர் இருக்கிறதோ அதற்குத் தக்க ப்டி உயர்ந்துகொண்டே வரும், அப்படியே அடியார் களுடைய உள்ளம் எவ்வளவுக்கு எவ்வளவு அன்பு கிறைந்து இருக்கிறதோ, அதற்கு ஏற்றபடி இறைவன் திருவடி உயர்ந்து பயனத் தந்து கொண்டே வரும். இவ் வாறு தாமரைக்கும் இறைவன் திருத்தாளுக்கும் உள்ள ஒப்புமையை எடுத்துச்சொல்லலாம். இவற்றுக்கு மேலே மற்ருென்று சொல்லவேண்டும். இ ைறவனு ைட ய தாளேயே முத்தி என்று முன்பு சொன்னேன். பேரின்யத் தேன் இறைவன் தாளில் இருக்கிறது. அந்தத் தேனே உண்னுகின்ற வண்டுகள் பெர் ய வ ர் களு ைட ய உளளங்கள. -

திருக்கோத்தும்பி புத்தியை வண்டாகவும், இறைவனுடைய திருத் தாளத் தேன் சொரியும் தாமரையாகவும் சொல்வது பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/98&oldid=575909" இலிருந்து மீள்விக்கப்பட்டது