பக்கம்:தனி வீடு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் 89

பெரியோர்களுக்கு இயல்பு. மணிவாசகப் பெருமான் திருக்கோத்தும்பி என்று ஒரு பதிகம் பாடி இருக்கிரு.ர். கோத் தும்பியே, நீ இறைவனுடைய திருவடிக் கமலத் தில் போய் ஊது' என்று சொல்வதாக அமைந்த பாடல் கள் அப்பதிகத்தில் இருக்கும். அங்கே தும்பி என்று விளித்தது மனத்தையே. . . . . . . . .

உலகத்தில் உள்ள மயக்கம் தரும் பொருளாகிய மலத்தில் மொய்த்து விழுவதை விட்டுவிட்டு இறைவனு டைய மலர் அடியில் மொய்த்து இன்பம் பெற வேண்டு மென்ற கருத்தை அப்பாடல்களில் சொல்கிரு.ர். -

தினத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ளுதே கினைத்தொறும், காண்தொறும், பேசுக்தொறும்

எப்போதும் 3 அனைத்தெலும்பு உள்ங்ெக, ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே சென்று தாய், கோத்தும்பி.'

சிறிய தேனும் பெரிய தேனும்

வண்டு உலகிலுள்ள பூக்களில் இருக்கும் தேனே உண்னுகிறது. அது மிகச் சிறிய அளவில் உள்ள தேன். அதனை உண்பதற்கு நாள் தோறும் பறந்து சென்று அல் கிறது வண்டு. அப்படி அலைந்தாலும் தான் சென்று சேரு கிற மலரில் தேன் குலைந்து இருக்கலாம்; பிற வண்டு உண்டதால் கலந்தும் இருக்கலாம்; அவ்வாறின்றி அங்கே தேன் இருந்தாலும் அந்த மலரில் உள்ள தேன் மாத்திரம் அதற்குப் போதாது. பல பல மலர்களிடம் சென்று சிறிய சிறிய அளவில் தேனைத் தொகுத்து அடையில் கொண்டு போய் வைக்கிறது. அப்படி வைத்தாலும் அந்தத் தேனைப் பிறர் கொண்டுபோய் விடுகிருர்கள். ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வோர் இந்திரியத்திற்கு இன்பத்தைத் தேடி அதல்ை நிறைவு பெருமல் மேலும் தேடிக்கொண்டிருக்கிற்து மனம். அப்படித் தேடுகின்ற இன்பமும் அடுத்த நாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/99&oldid=575910" இலிருந்து மீள்விக்கப்பட்டது