பக்கம்:தன்னுணர்வு.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3

உன்னுள்ளே பொதிந்து வைத்துள்ள ஆற்றலையும் அதன் நிலையையும் மலர்ந்து பரவச் செய். பேரறிஞர் எனப் படுவோர் செய்கையும் இதுவே

நாம் வினை மிகுந்த ஆடவர்கள்தாம். வீட்டிற்குள் கட்டிலின் மேல், மேனி முழுவதும் போர்த்துக் கொண்டு, படுத்துள்ள நோயாளிகள் அல்லமே! அல்லது தொட்டிலில் முடங்கிக் கிடக்கும் பிள்ளைகளும் அல்லமே அன்றியும் உலக மாற்றங்களைக் கண்டு அஞ்சி யொதுங்கும் பேடியரும் அல்லமே. நம் இயற்கைத் தாய், நமக்குள் துணை வைத்துள்ள படைகளை ஏந்தி, நம் காலத்து நம்மனோர் வழிப் பேரிருள் கப்பிய அறியாமையை எதிர்த்து நிற்கும் போர்மறவர்தாமே நாம்! ஒரு குழந்தைக்கிருக்கும் துணிவு கூடவா நமக்கு இல்லாமலிருத்தல் வேண்டும்?

ஒருவன்மாட்டு எழுகின்ற உள்ள ஆண்மையை அடக்கிவிடும்படி, அவனைச் சூழ்ந்துள்ள மக்கள் கூட்டமே ப்ொறாமையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் கூட்டத்திற்கு உண்மை பிடிக்காது. புதுவது புனைவோரைப் பற்றி அது கவலையுறுவது இல்லை. வெறும் பெயர்களும், பழைய பழக்கவழக்கங்களுமே அதற்குப் போதும். எவனொருவன் உண்மை மாந்தனாக விரும்புகின்றானோ, அவன் அதன் வழக்கமானவற்றை இடித்துத் தகர்த்தெறிப வனாக இருத்தல்வேண்டும். இஃது அறச் செயலன்று என நினைத்தல் வேண்டாம். உண்மையான அறிவின் நேர்மையைக் காக்க வேண்டியதுதானே அறம். உன் உள்ளம் கறையற்றுத் தூய்மையாக இருந்தால், நீ வருந்த வேண்டியதில்லை. உலகம் உன்னைத் தானாக நாடிவரும்

நல்லது, தீயது என்பவை வெறும் அழகுச் சொற்களே! மக்கள் ஒரு பொருளினின்று, இன்னொரு பொருளுக்கு அப் பெயர்களை மிக எளிதில் மாற்றி விடுவர். உள்ளம் எழுப்பு கின்ற ஆழமான் உண்ர்வில் உண்மையன்றி வேறில்லை. அதனால் வருகின்ற பிற தடைகளும், இழிவுப் பெயர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/15&oldid=1162183" இலிருந்து மீள்விக்கப்பட்டது