பக்கம்:தன்னுணர்வு.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

அழிகின்றவையே என்று நாம் கருதல் வேண்டும். வெறும் கூட்டங்களையும், அவற்றின் கூப்பாடுகளையும் கண்டு நாம் வணங்கி விடுவதா? வெட்கம்!

ஏழைகளுக்கு உழைப்பதே உன் வேலை என்று சொல்லாதே! அதுவே அறமென்றும் நினையாதே! அவர் தமக்கிருக்கும் உண்மையான ஆற்றலை மறக்கச் செய்து, உன் ஈகையால் மாய்ந்துபோகச் செய்வது, உன் வாழ்வையும் வீணடித்து அவர் வாழ்வையும் வீணடிப்பது ஆகும். நோயாளிகளும், பித்தர்களும், சோற்றுக் கடைக்காரனுக்கு இரண்டு மடங்கு விலை கொடுப்பதுபோல், அறங்கள், மக்கள்தம் குற்றங்களை மாற்றும் வழியென்று விலை தந்து, அவற்றைப் போக்க முயல்கின்றனர். நம் வாழ்க்கையின் நோக்கம் வாழ்க்கையே! ஊரார் மெச்சுதல் வேண்டுமென்ப தன்று. வாழ்க்கை வெளிக்கு மட்டும், பகட்டாக இருந்து நிலையான தன்மைக்கு மாறாக இருந்து விடுவதன்று. அது போலியாக இல்லாமலிருந்தால் மட்டும் போதாது; உண்மையாகவும் இருத்தல் வேண்டும்

உள்ளத்தை விட்டு விட்டு அறச் செயல்களின் விரிவைப் பார் என்றால் நான் ஒப்பமாட்டேன். நமக்குள்ள ஆற்றல் மிகவும் குறைவாகவே இருக்கலாம். ஆனால் உண்மையாக இருந்தால் போதும்

நாம் மக்களிடையே வாழ வந்த தேவை ஒன்றுண்டு. அந்தத் தேவைக்கான ஆற்றல் நம்மிடம் உள்ளத்தில் ஒளிர்கின்றது. அதுதான் நாம் செய்யவேண்டிய கடமை. நம் கடமை என்னவென்பதுதான் நம் வாழ்க்கைக்குப் பொருளே யொழிய, நம்மைப்பற்றி மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை அறிவது நம் வாழ்க்கைக் கடனன்று. பருவுலகினும் மனவுலகினும் இதன்படி நடப்பது கடினம்தான். ஆனால் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் உள்ள வேற்றுமை மாற்றம் இதுவே. உன் கடன் என்ன என்பதை உன்னைக் காட்டிலும் உன்னைச் சுற்றியுள்ள மாந்தர் அறியார். ஆனால் அதை அறிந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/16&oldid=1162184" இலிருந்து மீள்விக்கப்பட்டது