பக்கம்:தன்னுணர்வு.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

தன்னாற்றல் பெற்றுத் தனக்கென உள்ளடங்கிக் கிடக்கும் வன்மையையும், உண்மையையும் வெளிக் கொணர முயல வேண்டும். அதை விட்டுவிட்டுத் தலைமுறை தலைமுறையாக ஒருவன் சொன்னவற்றிலும், அவன் சென்ற வழியிலுமே கருத்துன்றி, அவற்றையே பின்பற்றிப் போய்க் கொண்டிருப்பது வருந்தத்தக்கது

கிறித்து என்றொருவன் தோன்றினான். கோடிக்கணக்கான மக்கள் அவன் அடிப்புகுந்து, அறமும் வாழ்க்கையின் முழுமையும் அவனையன்றி வேறில்லை என நினைத்து விடுகின்றனர். ஒரு சமயம் என்பது ஒரு தனி மாந்தனின் அல்லது ஒரு குழுவின் மிக வளர்ந்த சாயலே. தொன்ம(புராண) தொல்பெருங்கதைஇதிகாசங்களும், உறுதியும் துணிவும் கொண்ட வல்லார் சிலரின் சாயல்களே

மாந்தன் தன் திறமையைத் தெரிந்துகொண்டு, முழுஆற்றலையும் வெளிக்கொணர வேண்டும். பருத்த புத்தகங்களைப் பார்த்த அளவிலேயே அவற்றைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் தனக்கில்லை என்று அஞ்சிச் சோர்ந்து போகின்றான். ஆனால் அந்த நூல்களோ, பிறர் தம்மை எக்கால் எடுத்துப் படிக்கப் போகின்றனரோ என்று ஏங்கிக் கிடக்கின்றன

பெரிய வள்ளல்கள், அரசர்கள் வாழ்ந்த கதைகளில் மக்களுக்கு அறிவுக்கிறக்கம் ஏற்பட்டு விடுகின்றது. அவர்தம் செயல்களோடு தம் தம் செயல்களை, ஒப்பிட்டு, ஏக்கப் பெருமூச்சு விட்டு அங்காந்து விடுகின்றனர். அவர் தம் வாழ்க்கையையும், தனி மாந்தனாகவும், மிகவும் திறமை யற்றவனாகவும் கருதிக்கொள்ளும் ஒருவனுடைய வாழ்க்கை யையும், கூட்டிப் பெருக்கிக் கழித்துப் பார்த்தால், இரண்டிற்கும் பயன் ஒன்றாகவே இருக்கும். முன்பிருந்த வள்ளல்களோடு அறச்செயல்கள். போய் விடுவதுமில்லை; அரசர்களோடு ஆண்மை வினைகள் முடிந்து விடுவதுமில்லை

தன்னை வேறு எந்த ஒன்றிற்கும் இணையாக வைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/19&oldid=1162189" இலிருந்து மீள்விக்கப்பட்டது