பக்கம்:தன்னுணர்வு.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13

கதவைத் தடதடவென இடித்து, “எங்களிடம் நீ வரவேண்டும், எங்களோடு சற்றுப் பேசவேண்டும்” என்று ஓயாமல் அழைக்கலாம். ஆனால், நீ உன் ஆற்றலை அப்படியே புறந் தள்ளிவிட்டு உன்னை அதனின்று விடுபடுத்திக் கொண்டு, அவர்தம்பால் ஓடிவிடாதே! உன் உறுதியற்ற அலைமோதும் உள்ளந்தான், உனக்குப் பிறர் தொல்லை தரும்படியான ஆற்றலை அவா்கட்குத் தருகின்றது. உன் உள்ள ஆற்றலைப் பயன்படுத்துவாயானால், உன் இசைவின்றி எவனும் உன்னை நெருங்கி உன் எண்ணங்களை நிலைகுலைத்துவிட முடியாது

எதை யெண்ணித் தூய்மையான வலிந்த ஆற்றலோடு அன்பு காட்டுகின்றோமோ, அது நம் கைகளில் தானே வந்து விழுகின்றது. ஆனால் புலன் வேட்கையில் மூழ்கி மூழ்கி நம் ஆற்றலைச் சிதைத்துக்கொள்கின்றோம் என்று மெய்யறிஞர் ஒருவர் கூறியுள்ளதை நினைவூட்டுகின்றேன்

குழம்பிப்போய் உண்மை உருவற்று, விளக்கெண்ணை யில் வீழ்ந்த வெண்டைக்காய்போல், கொழ கொழக்கும் இந்தக் காலத்தின் முறையற்ற வினைப்பாடுகளை, நாம் உண்மையான மனவாற்றலைக் கொண்டு எதிர்ப்பதுதான் சரியான வழி போலி நட்பையும், பொய் வணக்கங்களையும், இரக்கமின்றி வெட்டியெறி. தாங்களும் ஏமாறிக்கொண்டு, பிறரையும் ஏமாற்றிக்கொண்டு, உன்னையும் ஏமாற்றவரும் உன் உறவினர்கள், நண்பர்கள்தம் விருப்பப்படி நடவாதே. அவர்களை உன் முன் நிறுத்திப் பின்வருமாறு உரத்த குரலொடு அழுத்தமாகக் கூறிவிடு. "ஏ! தந்தை தாயாரே! ஏ! மனைவி மக்களே! ஏ! உடன் பிறந்தவனே! ஏ! நண்பனே! நான் இதுவரை இவ்வுலகத்தின் நடைமுறைகளுக்கு ஒத்து உங்களோடு ஒன்றி நடந்துவந்தேன். ஆனால் இது முதல் நான் மெய்ப்பொருளின் உட்கிடையாகி விட்டேன். அந்த மெய்ப்பொருளின் உண்மை ஏற்பாடுகட்கு மாறாக நான் வேறெவர்க்கும் தலை வணங்கேன். எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/25&oldid=1162265" இலிருந்து மீள்விக்கப்பட்டது