பக்கம்:தன்னுணர்வு.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14

இனிப் போலிச் சமயத்தின் ஒழுகலாறுகள் வேண்டாம். உண்மை அறிவுதான் வேண்டும். உங்கள் பழக்கவழக் கங்களை நான் இனி ஒப்பேன். என் உள்ளம் கூறுகின்ற மெய்யான கட்டளைகட்கே நான் இசைந்து நடப்பேன். நீங்கள் என்மேல் அன்பு காட்டினால் அந்த அன்புக்கும் என்னை உரியவனாக்கிக் கொள்வேன். என் விருப்பு வெறுப்புகளை உங்களிடமும் வேறு எவரிடமும் ஒளிக்கப் போவதில்லை. என் உள்ளத்தையே வாயாகக்கொண்டு சொற்களைத் துணிவுடன் யார் மாட்டும் உதிர்ப்பேன். உங்களிடம் சால்பு இருந்தால் உங்களை நான் விரும்புவேன். இல்லாவிட்டால் வெளிக்குமட்டும் உங்களை விரும்பி மதிப்பது போல், பொய்யாக நடித்து, உங்கட்கும், எனக்கும் ஏமாற்றத்தைத் தேடித் தரேன். நீங்களும் நல்ல நெறிகளில் நடக்க விரும்புவதாக என்னிடம் கூறுவீர்களானால், உங்களுக்குரிய கூட்டாளிகளை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள். நானும் எனக்குற்றவர் களைத் தேடிக் கொள்வேன். இவ்வளவும் தலைச்செருக்கோடும், அறிவுத் தருக்கோடும் கூறுவதாக நினைக்க வேண்டாம். அடக்கம் வழிந்தோடும் தூய்மையான உண்மை உள்ள ஆற்றலோடு பேசுகின்றேன். பொய்யிடம் நெடுநாள் பழகிவிட்டதாலேயே, நாம் அதனுடன் ஒன்றிப் போய்விடக் கூடாது. இறுதிக் காலத் திலாவது அறிந்து கொண்ட மெய்ம்மைகளைப் பின்பற்றி நடப்பதால் உங்கட்கும் எனக்கும், மற்றெவர்க்கும் நன்மையே காத்திருக்கின்றது. உயிர் அடையும் ஊதியமும் அதனுள் பொதிந்துள்ளது. இன்றைக்கு நான் கூறுகின்றவை யெல்லாம் கடுமையாகத் தோன்றலாம். ஆனால் விரைவில் உங்கள் போலி அடக்கத்துக்கும் என்னுடைய உண்மையான கடுப் பிற்கும் வேற்றுமைகளை அறிந்து கொள்வீர்கள். அதனால் இறுதியில் கைவருவது நன்மை ஒன்றே"

இப்படிக் கூறுவதால் அவர்தம் உள்ளம் நோகலாம். அவர்கள் நம்மேல் வைத்த நம்பிக்கை சாம்பிப் போகலாம்; உண்மைதான். ஆனால் அவர்கட்கு மனம் நோகாமலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/26&oldid=1162279" இலிருந்து மீள்விக்கப்பட்டது