பக்கம்:தன்னுணர்வு.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17

என்ன வெல்லாமோ தனக்குத் தேவை என்று வேண்டிக் கொள்கின்றான். தனக்கென நன்மை வேண்டுமென்று இறைவனை வேண்டுவது இழிவும், திருட்டுத்தனமும் ஆகும். தனக்குண்டான வினைப்பாடுகளை உண்மையாகச் செய்வதுதான் இறைவனை வழுத்தும் மெய்யான முறை என்று அவன் அறிவதில்லை. குறிக்கோள் சிறிய அளவாக விருப்பினும் களைகளைப் பிடுங்கி எறிவதற்காக உழவனும், துடுப்புகளை வலிப்பதற்காகப் படகோட்டியும், மண்டியிட்டு உட்காருவதும் உண்மையான வழிபாடாகும். இந்த வழிபாடே உலகின் எம்மருங்கிலும் ஒலிக்கும் ஆற்றலுடையது. நாம் இறைவனை நோக்கி வருந்தி வேண்டுவதும் அவனை நொந்து கொள்வதும் நம் நம்பிக்கைக் குறைவையும், உள்ளத்தின் உறுதியின்மையையுமே. காட்டுகின்றன. பிறர் வருத்தத்திற்காக இரங்கும் போலிச் செயலும் வேண்டுவதில்லை. உண்மையாகத் தொல்லையுறுபவர்க்கு உதவிசெய்ய முடியுமானால் இரங்கு; இல்லையேல் உன் வேலையை நீ செய்துகொண்டு போ. தொல்லை தானாக நீங்கிப் போகும். பிறர் அழுவதைப் பார்த்து நாம் அவர்களோடு சேர்ந்து அழுவதும் சிறுமைச் செயலே. அறிவின்றி அழுதுகொண்டிருப்பவர்க்கு, மின்னல் வெட்டுவது போலப் பேசி ஆறுதல் கூறி உண்மையை உணர்த்துவதற்கு மாறாக, நாமும் சேர்ந்துகொண்டு அழுவது நாம் செய்யத் தக்கதில்லை

உண்மையான உள்ளத்தின் வலிந்த ஆற்றலைக்கொண்டு எவன் தன்னைத் தானே கைதுக்கி விட்டுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றானோ அவனே இறைவனுக்குகந்தவன்! 'துயர்களைப் பார்த்து மனந்தளராது விடாப்பிடியாக முன் செல்பவனுக்கு இறைவன் மிக விரைந்து உதவிக்கு வருகின்றான்' என்று ஈரானிய மெய்யறிஞன் ஒருவன் கூறுகின்றான். (குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம் மடிதற்றுத்தான்முந்துறும் - என்னுத் திருக்குறளை ஓர்க)

ஒவ்வோர் அறிஞனும் ஒவ்வொரு புதிய படைப்பாளன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/29&oldid=1162314" இலிருந்து மீள்விக்கப்பட்டது