பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தப்பிவிட்டார்கள் கிறது என்றாளே - ஒருவேளை காய்ச்சல் வந்து விட் டதோ? என்ற சந்தேகம் அவனுக்கு. மனைவியின் மேல் ஒரு எறும்பு கடிக்கக்கூடப் பொறுக்கமாட்டான் விட்டல். அவ்வளவு ஆசை! ஏழைக்கு, அதைத் தவிரத் தான் வேறென்ன இன்பம்! விட்டல் மில்லை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தான். ஆலை சங்கு ஊதியதும், அத்தானைக்காணவேண்டு மென்று ஆவல் ததுமபப்புறப்பட்டாள் தங்கம் பகலெல் லாம் மில்லில், பஞ்சைப் பதப்படுத்த வேண்டிய பணி அவளுடையது. அவளுடைய கறுத்த மேனியும், முகத் தில் அவளுக்கென்றே அமைந்த தனிக் களையும் விட் டலின் பயங்கரக் கவலைகளையெல்லாம் எத்தனையோ முறை விரட்டியிருக்கின்றன. காலை முதல் கஷ்டப் பட்டு, கை கால் வலியெடுத்து நிற்கும் அவனுக்கு அவளுடைய 'தரிசனம்' தான் மருந்தாக இருக்கும். அதைப்போலவே அவளும் அவனைப்பார்த்து குளிர்ச்சி பெறுவாள். வேலை முடிந்ததும் தலையில் ஒட்டிக்கொண் டிருக்கிற பஞ்சைத் தட்டக்கூடநேரமிருக்காது. அவசர அவசரமாகப் புறப்படுவாள், அத்தானைப் பார்க்க. அன்றும் அப்படித்தான் வந்து கொண்டிருந்தாள். பியூன் சிங்காரம் பின்னாலேயே ஓடிவந்து, தங்கத்தைப் பார்த்து - உன்னை முதலாளி கூப்பிடுகிறார்" என்றான். என்ன காரணம் என்றே புரியாத தங்கம் திடுக்கிட் டாள். முதலாளியின் அறைக்குச்சென்று அடக்க ஒடுக்கமாக ஒதுங்கி நின்றாள். ராமதுரை ஒரு சிக ரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு 'தங்கம் வேலையெல்லாம் முடிந்ததா?" என்றார். தங்கம், "உம்" என்று தலையை அசைத்தாள். நீ ரெம்ப திறமையாக இருக்கிறாயாம் மானேஜர் சொன்னார்."-இதற்கு தங்கம் பதில் கூறவில்லை. ஒரு புன்சிரிப்புத்தான். அந்தப் புன் முறுவலை ராமதுரை உற்றுக் கவனித்தார். "இந்த மாதத்திலிருந்து உனக்குச் சம்பளம் அதிக மாக்கச் சொல்லியிருக்கிறேன்.' 66