பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி கன்னங்கள் 9 தங்கம் இப்போதும் பேசவில்லை, மட்டும் குழியாயின. இந்தச் சந்தோஷ சமாசாரத்தை அத்தானிடம் சொல்லவேண்டுமே என்று துடித்தாள். அங்கு நின்றுகொண்டு, இளித்துக் கொண்டிருந்த சிங் காரத்தைப் பார்த்து ஏய் போடா.... காப்பி கொண்டு வாடா" என்று அதட்டினார். அவன் ஓடிவிட்டான். ராமதுரை சிகரெட் சாம்பலைத் தட்டிக் கொண்டார். சாம்பல் பூக்காதிருக்கும் போதே, அதைப் பல முறை தட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு சிகரெட்டை எடுத்தார். தீக்குச்சி அணைந்து விட்டது. சே! ஒரே காற்று! ஜன்னல் கதவுகளைச் சாத்தி விட்டு, மீண்டும் தீக்குச்சியைத் தட்டினார், ஆனால் சிகரெட்கொளுத்தப் படவில்லை. 'அடாடா என்னகாற்று! சனியன்! தங்கம் அந்தக் கதவைச் சாதது" என்று சொல்லும் போதே ராமதுரையின் குரல் நடுங்கிற்று, குளிரில் நடுங்கும் கிழவனின் குரல் போல். தங்கம் முதலாளியைப் புரிந்து காண்டாள். நான் வருகிறேன்" என்று கூறிவிட்டு ஒரு அடி எடுத்து வைத்தாள். ராமதுரைக்கு அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. தங்கத்தின் மேல் தாவினார். கதவுகள் மூடிக்கொண்டன. அவள் 'ஐயோ' என்று அலறினாள். ராமதுரையின் வாயிலிருந்து போதை நிரம்பிய வார்த்தைகள் உதிர்ந்தன. 'பச்சைப் பசுங்கிளியே, பேசும் பொற் சித்திரமே. என் இ சைக்கு இணங்கிவிடு தங்கப் புறாவே." அவள் நடுங்கி னாள். "நடக்கும் பொன் வண்டே ஏன் நடுங்குகிறாய்?" ராமதுரை தங்கத்தை அணைத்துக் கொண்டார். அவள் திமிறிக் கொண்டு கோவெனக் கதறினாள். முதலாளி யின் காலில்விழுந்து 'என் கற்பைக் காப்பாற்றுங்கள் என்று கதறினாள். "போர்க்களத்தில் ஒப்பாரியும் போகக் களத்தில் புலம்பலும் கோழைகள் செயலடி, கோமளாங்கி" என உபதேசம் செய்தார். தங்கத் தால் அந்தக் காண்டாமிருகத்தின் பிடியிலிருந்து மீள முடியவில்லை. தங்கத்தின் மென்மையான அதரங்கள் .