பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி 11 கொண்டு தங்கத்திடம் ஓடி வந்தான். தங்கம் தரையில் சுருண்டு கிடந்தாள். அவளை ஒருகையால் அணைத்துத் தூக்கிக்கொண்டு மில்லுக்கு ஓரமாக நீர் வற்றிப்போயி ருந்த ஒரு வாய்க்காலுக்குள் ஒளிந்து கொண்டான். மில்லிலிருந்து ஆட்கள் சிதறினர். டெலிபோன்கள் அலறின. தங்கம் தன் சேலையைக் கிழித்துச் சுற்றி னாள். விட்டலால் நிற்க முடியவில்லை. தள்ளாடினான். அவன் ரத்தமெல்லாம் விலா வில் ஏற்பட்ட ஓட்டை வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது. "அத்தான், என்னையும் கொன்று விடுங்கள்' என்று தேம்பினாள். "தங்கம் உஸ்" என்று அவளைத் தட்டிக் கொடுத்தான், ...அவன் இமைகள் ஈரமாயின. இருவரும் தழுவிக் காண்டார்கள். தங்களிருவர்களிடையே ஏற்படப் போகும் பெரியதொரு பயங்கரமான நிகழ்ச்சி, அவர் களைப் பைத்தியம் போல ஆட்டி வைத்தது. வாய்க்காலுக்குள்ளேயே நடந்தால் அடுத்த ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் விடலாம்.எப்படியா வது தப்ப முயலுவோம்" என்று தழுதழுத்த குரலில் கூ றினான் விட்டல். தங்கம் கண்ணீர் பொழிந்தாள். ருவரும் நடந்தார்கள். நடந்தார்கள். நடந்து காண்டே இருந்தார்கள்... கொலைகாரனை, போலீஸ் வலைபோட்டுத் தேடும்போதெல்லாம் நடந்து கொண்டு தானிருந்தார்கள். " இந்த இங்கு போலீஸ் வீரர்கள் ஊரை ரகளை செய்தார் கள். அநாயத்தைத் தவிர மற்ற இடங்களில் பார்த்து விட்டதாகப் பெருமையடித்துக் காண்டனர். ஊருக்குள் பார்க்காத இடமில்லை. எதிலும் பயனில்லை என்றதும், ஒன்பது மணிக்கு புறப்படுகின்ற ரயில் வண்டியில் கொலைகாரன் தப்பிவிடலாம் என்ற யோசனையின் பேரில் எல்லா ரயில்வே ஸ்டேஷன் களுக்கும் லாரிகள் பறந்தன, பத்து மைலுக்குட்பட்ட இடங்களுக்கு. கமலாபுரம் ஸ்டேஷனை நோக்கி ஒரு லாரி ஓடிற்று.