பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தப்பிவிட்டார்கள் ஆம்! அந்த ஸ்டேஷனை நோக்கித்தான் தங்கமும் விட்டலும் போய்க்கொண் டிருக்கிறார்கள். இன்னும் பத்து நிமிடங்கள் பாக்கி வண்டி வருவதற்கு! அவர் களும் கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்கள். ஆனால் விட்டலால் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. விலாவின் வலி அதிகமாகி விட்டது. ஐயோ ஐயோ" என்று கத்த ஆரம்பித்தான். தங்கத்தின் நெஞ்சு படக் படக்' என்று அடித்துக் கொண்டது, அவள் காதில் தட்டுவது போலிருந்தது. ஆலைவேலை முடிந்து ஆனந்த லாகிரியில் மூழ்கி அத்தானுடன் படுத்துறங்கும் தங்கம் எங்கே? இப்போது மரணமூச்சு விட்டுக்கொண்டிருக் கும் இந்த அபாக்கியம் நிறைந்த தங்கம் எங்கே? அத்தான்" என்று கொஞ்சியபடி அவன் கைகளை எடுத்துத் தன் தோளின் மேல் போட்டுப் பிடித்துக் கொண்டு மூச்சைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம் பித்தாள். 6. எப்படியும் அவனை ஸ்டேஷனுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து விடலாம் என்ற அசட்டுத் தைரியம் அவளுக்குப் பிறந்துவிட்டது. அந்த அந்த ரயில் மட்டும் கிடைத்து விட்டால்? பிறகு எங்கேயாவது போய், எப்படியாவது தப்பித்து விடலாம் என்ற ஒரே ஆசை தான் அவர்களை விரட்டியடித்தது. திணறித் திணறி மூச்சு விட்டான். தங்கம் வேசங் கொண்டவளாய் நடந்து கொண்டிருந்தாள். விட்டல் திடீரென அவள் முகம் மலர்ந்தது. ரயில்வே ஸ்டே ஷன் சிவப்பு விளக்கு தெரிந்துவிட்டது. இன்னும் சில நிமிஷங்கள்.வாய்க்காலிலிருந்து மேலே ஏறவேண்டும் அவ்வளவுதான்...... சற்று நேரத்திற்கெல்லாம் ரயில் வந்து விடும். தப்பிவிடலாம். தங்கம் விட்டலைக் கட்டிக் கொண்டு "அத்தான்" என்றாள். அழுகையும் சிரிப்பும் கலந்து சோகத்தை அதிகமாக்கின. கரையில் ஏறிக் கொண்டு பலங் கொண்ட மட்டும் முயன்று தன் ஆசை