பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி 23 23 இந்த ஊர்திரும்ப மாட்டான். வந்தால்....ஜமீன்தார் அவன் காலை வாங்கி விடுவார். பேசாமல் எங்க அபிப் பிராயப்படி நட. 66 .. அண்ணா!.. நான் தாசி உன் தங்கை தாசி ஐயோ... இந்த வார்த்தை உனக்கு நஞ்சாகத் தெரிய வில்லையா? .. நஞ்சாவது பஞ்சாவது... தெரியாமத்தான் நம்ப பெரியவாள் காலத்திலே யிருந்து நடக்குதா?" "பெரியவர்கள்... பெண் உலகத்தின் பரம எதிரி கள்! பாவிகள்!... பாம்புக் கூட்டங்கள்!" பண் "துள்ளாதே லக்ஷ்மீ!... நாளைமறுநாள் நம் வீட் டுக்கு ஜமீன்தார் வருகிறார். ஏதாவது தகராறு ணினால்.... நம் தலையே போய்விடும்.' 73 "ஏண்டா தம்பி நடராஜா!... பொட்டுக்கட்டிக் கலியாணம் முடியறத்துக்குள்ளே... ஜமீன்தார் வருவ தாடா?" "போ அம்மா!.. உன் பழைய சாஸ்திரத்தைக் குப்பையில் போடு. பொட்டு அப்புறம் கட்டிக்கலாம், முதலில் துட்டு வரட்டும்." நடராஜன் தன் கலைந்துபோன தலையை ஒழுங்கு படுத்திக்கொள்ள நிலைக்கண்ணாடிக்கு முன் சென்றான். விம்மி விம்மி அழுதபடி அழுதபடி லக்ஷ்மீ அதைவிட்டு நகன்றாள். அவளது அதரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. நடுங்கும் அதரங்கள் 'வைரக்கண்ணு" என்று ஒரு வார்த்தையை வெளியே நீட்டி மீண்டும் மூடிக்கொண் டன. 0 0 0 வைரக்கண்ணு தலையங்கத்தை எழுதிமுடித்தான்• தலையங்கத்தின் கடைசிப் பகுதிகளை இரண்டு முறை படித்துப் பார்த்தான்.