பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ கருணாநிதி 27 அவன் காதலுக்காக அவள் பட்ட இன்னல்கள் எத்தனை! வைரக்கண்ணு விரட்டப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டாள். அது அவள்விலாவில் பாய்ந்தவேல். காதலில் கொண்டிருந்த உறுதியால் அவள் களைக்கவில்லை.நடராசனின் 'நாட்டு சோக்காளி வாழ் வுக்கு தன் வாழ்வு பலியிடப்படவேண்டுமென்ற பலாத் காரம்!..... இது எரியும் தீயில் எண்ணெய்...... அவள் விடுதலை விழா அன்று! அதை நினைத்து மகிழ்ந்தாள். ஆடிக்கொண்டே உள்ளே ஓடினாள் ... குயிலிசை கிளம்பிற்று. 0 0 0 வடநாட்டு மார்வாடியின் காசுக்கடையில் வைர வளையல்கள் சோதனை செய்யப்பட்டு விலைபேசுங் கட்டம் வந்தது. "வைரம் உயர்ந்ததல்ல சாதா வைரங்கள். எல் லாம் நூறு ரூபாய்கூடப்பெறுமானமில்லை" மார்வாடி அலட்சியமாக வளையல்களைக் கீழே வைத்தான். வைரக்கண்ணு வளையல்களை எடுத்துக்கொண்டு கண்ணைத் திறந்து கேளய்பா" என்றான். 66. போனால் போகிறது....நூற்று ஐம்பது வாங்கிக் கொள்- இது மார்வாடி. € "பாவம் ஐயாவுக்குப் பரிதாபம்" வைரக்கண்ணு கிண்டலாகப் பேசினான். . "ஒரே விலை... இருநூறு ரூபாய்!” "தமிழ் நாட்டுக்காரனுக்குப் புத்தியே யில்லை என்பது ஐயாவின் அபிப்பிராயம்"-வைரக்கண்ணு ஆத்திரத்தோடுதான் இதைக் கூறினான். "சரி. கோபிக்காதே கிறேன். சார்...மறுபடியும் பார்க் மார்வாடி வளையல்களை வாங்கி மீண்டும் மதிப்புப் பார்த்தான். பார்த்துக்கொண்டிருக்கும் போதே தன் கடைப் பையனிடம் ஏதோ இந்துஸ்தானியில் சொன்