பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 28 வளையல் வாங்கலையோ னான். கடைப் பையன் எங்கேயோ ஓடினான். திருப்பித் திருப்பி, வளையல்களைப் பார்த்துக் கொண்டே யிருந் தான். வைரக்கண்ணுக்கும் அலுத்துவிட்டது. "சீக்கிரம் பாரய்யா!” 'இதோ முடிந்துவிடும்.' 6. எவ்வளவு நாழிகை மதிப்புப் பார்க்க?" "பையன் போயிருக்கிறான். வரட்டும் உங்களை அனுப்பி விடுகிறேன்.' 19 கடைப் பையன் திரும்பினான், அவனைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டரும் வந்து சேர்ந்தார். வைரக்கண் ணு.. நகைகளைத் திருடிவந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டான். "உங்க பெயர் வைரக்கண்ணுதானே?" 66 "ஆமாம்." "பாட்டாளி பத்திரிகையின் எடிட்டர் நீர்தானே?" 'ஆமாம். 66 இது யாருடைய நகைகள்?" "என் மனைவியின் நகைகள்.' "முன்பு ... ஒரு முறை...உமக்குக் கல்யாணம் ஆக வில்லை யென்று என்னிடம் சொன்னீரே!" "மனைவியல்ல...என்காதலி, அவள் விருப்பத்தின் படிதான் இவைகளை விற்க வந்தேன். "உம் காதலி... இப்பொழுது எங்கே?"" "என் வீட்டில் இருக்கிறாள். "சரி....வீட்டுக்குப் புறப்படும். "இதோ... வருகிறேன்." சப் இன்ஸ்பெக்டரும், வைரக்கண்ணும், வேடிக்கை பார்த்தவர்களும் அவன் வீடு நோக்கி நடந்தார்கள். வீடு நெருங்க நெருங்க வைரக்கண்ணுக்குச்சிரிப்பு வெடிக்க ஆரம்பித்தது, சப்இன்ஸ்பெக்டர் சரியானபடி