பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி 29 29 ஏமாறப்போகிறார் என்று அவன் மனதில் ஏளன எண் ணம் தோன்றிற்று. வீட்டுக்குள் நுழைந்தார்கள். "லக்ஷ்மீ" என்று வைரக்கண்ணு ஆவலோடு கூப் பிட்டான். பதில்வரவில்லை. ஒரு மூலையில் அவள் படுத் திருந்தாள். 'பகலிலா தூக்கம்?" அவளைத் தட்டி எழுப் பினான். சப் இன்ஸ்பெக்டருக்குச் சந்தேகம் தீர்ந்தது. திடீரென வைரக்கண்ணு அலறினான் முகத்தி லறைந்து கொண்டான். அவன் முகமெல்லாம் ரத்தக் கறைகளோடு... பைத்தியம் பிடித்தவன் போல்... ஆடினான். எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள். லக்ஷ்மி பிணமாகக் கிடந்தாள், வைரக்கண்ணு கைது செய்யப் பட்டான். "திருடன்!கொலைகாரன்!" சப் இன்ஸ்பெக்டரின் சண்டமாருத ஒலிகள்! "பாவிப்பயல்....ஒரு அழகான பெண்ணை நகை களுக்காகக் கொலை செய்திருக்கின்றானய்யா.” வேடிக்கை பார்த்தவர்கள் கூறினார்களிப்படி! தாசித் தொழிலுக்குஒத்துவராத தங்கை,தன்னை யும், ஜமீன் தாரையும் ஏமாற்றிவிட்டு... ஒரு அநாதைப் பயலோடு வாழ்வது பிடிக்காத நடராஜன், ஓடிவந்த வளைக் கண்டுபிடித்துக் கூப்பிட்டுப் பார்த்தும் வராத தால் சுட்டுக் கொன்றுவிட்டுப் போய்விட்டான் என்ற ரகசியம் யாருக்குந் தெரியாது. எப்படித் தெரிய முடியும்? வைரக்கண்ணு வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட் டான். அவன் பழைய வைரக்கண்ணு அல்ல. பைத் தியக்கார வைரக்கண்ணு...வக்கீல் எது கேட்டாலும், வளையல் வாங்கலையோ வளையல்" என்றபதிலைத்தான் சொல்லுகிறான்.