பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 31 அவர்களுக்கென ஒரு பகுதியை செலவளித்துக் கொண்டிருந்தார், தங்கப்பன். அவர்களில் ஒருவன் தான் லக்ஷ்மி நாராயணன். அவன்கதை தங்கப்பனால் கேட்க முடியவில்லை, அவ்வளவு வேதனை யடைந்தார். ம 'பத்துநாள் வீட்டிலேயே சாப்பிட்டுக்கொண்டிரு எங்கேயாவது, வேலை தேடிப்பார்க்கிறேன்" என்று உறுதியளித்தார்.ஏழெட்டு நாட்களாகி விட்டன. னும் வேலை கிடைத்தபாடில்லை. இன் ஒரு நாள் தங்கப்பனுக்கு, அவரிடம் ஆறுமாதத் துக்கு முன் கடன் வாங்கி யிருந்த ஒரு தோழரால் அனுப்பப்பட்ட ரூபாய் முந்நூறு மணி ஆர்டர் வந்தது. போன பணம் திரும்பி வந்த ஆனந்தத்தில் தில் அதை பெட்டியில்கூட எடுத்துவைக்காமல் மேசை மேல்வைத்த படி பேமறந்து விட்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்று விட்டார். பாடம் நடந்துகொண்டிருக்கும்போது பணத் தின் நினைவு வந்தது. லக்ஷ்மி நாராயணன் மேல் திடீ ரென சந்தேகமும் பிறந்தது. பாடத்தைச் சீக்கிரம் முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார். வரும் வழி யிலே யெல்லாம் நல்ல உயிர் இல்லை. "என்னதான் நல்லவனா இருந்தாலும் ரூபாய் முந்நூறு அல்லவா? என். று எண்ணியவாறு நடந்தார். வீட்டுக்கு வந்தார். வாசலில் உட்கார்ந்திருக்கும் லக்ஷ்மி நாராயணனைக் காணவில்லை. உள்ளே போனார், பணத்தையும் காண வில்லை. வீட்டில் விசாரித்தார்.. பணம் போய்விட்டது. தங்கப்பன் ஒரு அலட்சியமான புன்சிரிப்புடன் மீண் டும் பள்க்குத் திருப்பினார். சேலம் ரயிலடியில் பிற் பகலே வண்டியைப்பிடித்து ஈரோடு வந்து சேர்ந்தான் லக்ஷ்மி நாராயணன். ஈரோட்டில் ரெடிமேடு கடையில் நுழைந்து வெளியே வரும் போது மைனராய் . மாறி வந்தான். அவன் மனம் ஏதோ பேசிக்கொண் டிருந்தது. 'முந்நூறு ரூபாய்க்கு ஒரு வெற்றிலைபாக் குக்கடை; தானே முதலாளி' என்று திரும்பத் திரும்பப்