பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை 'தப்பிவிட்டார்கள்' - சமூகத்தின் உண் மைப் பிரதிபலிப்புகள் நிறைந்த கதைத் தொகுதி. சமுதாயக் கொடுமையினின்று தப்பி விட்டவர்கள், அண்ணனென எண்ணி ஆசைப்பார்வை பார்த்தவளை தன்காமத்துக் குப் பலியாக்க எண்ணும் சபலக்காரர்கள், சமூகத்தின் கோரப்பிடியால் குற்றம்சாட்டப் படும் நிரபராதி, உதவி செய்ய வந்தவரிடமே ஏமாற்று வித்தையைக் காட்டி பின் தானே மற்றொருவனால் ஏமாற்றப்படும் மோசக் காரன் ஆகிய சமூக அரங்கின் பல கதாபாத் திரங்களைக்கொண்டு அழகாகப் பின்னப் பட்ட சிறு கதைகளின் தொகுப்பை உங்கள் முன்னே பெருமையுடன் அளிக்கிறோம். சிறு கதைகளானாலும் சிந்தனையைக் கிளறிக் கருத்துக்குப் புதுவுரை கொடுத்து நெஞ்சை விட்டு அகற்ற முடியா முறையிலே இத்தொகுதியிலேயுள்ள நான்கு யுள்ளன கதைகளும். க நான்காம் பதிப்பாக இக் கோவையை வெளியிட இசைந்த ஆசிரியருக்கு எங்கள் . நன்றி உரித்தாகுக. -பதிப்பகத்தார்