பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடனக் கலை 85 என்பனவும்,இவை போன்று திருப்பதிகங்களில் வருவனவும் அக்காலக் கூத்துக்கலை வளர்ச்சியை நன்கு உணர்த்துவன வாகும். கி. பி. 9-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த சுந்தரரை மணந்து கொண்ட பரவையார் திருவாரூர்க் கோவில் நடன மாதராவர். அவர் ஆடல்-பாடல்களிற் சிறந்து விளங்கினர். காயன்மார் காலமாகிய பல்லவர் காலத்தில் தில்லேப் பெருமான் கூத்தப்பெருமான் (நடராசர்) என்று நாயன் மாராற் பாடப்பட்டான். அவனது திருக்கூடத்தைச் சிறப் பித்து அவர்கள் பல பாக்கள் பாடியுள்ளார்கள். பல்லவர் காலத்துக் கோவில்களில் நடன மாதர் இருந்தனர் என்ப தற்கு மேற்சொன்ன இலக்கியச் சான்றுகளே யன்றிக் கல்வெட்டுச் சான்றுகளும் உண்டு. அம் மாதரசிகளே இசையையும் கூத்தையும் வளர்த்தனர். அவர்கள் அக் காலத்தில் கணிகையர், மாணிக்கத்தார் எனப்பட்டனர். காஞ்சி-முத்திச்சுரர் கோவிலில் மட்டும் காற்பத்திரண்டு பேர் இருந்து இசை, கூத்து ஆகிய கலைகளே வளர்த்தனர் எனின், பிற கோவில்களில் இருந்தாரைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ? அது பற்றிய விவரங்கள் விரிக்கிற் பெருகும். சோழர் காலம் சிற்பங்கள் தமிழக வரலாற்றில் சோழர் காலம் (900-1800) பொற்காலம் என்னலாம். அக்காலத்தில் சைவ-வைணவ சமயங்கள் நன்கு வளர்ச்சி பெற்றன. கோவில்கள் கற் கோவில்களாக மாற்றப்பட்டன. ஒவியம்-சிற்பம்-இசை -கடனம்-நாடகம் முதலிய கலைகள் நன்கு வளர்க்கப் பட்டன. சோழர்கள் சிறந்த மொழிப்பற்றும் கலையுணர்ச்சி யும் கொண்டவர்கள். அவர்கள் காலத்தில் புதுப்பிக்கப்