பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தமிழகக் கலைகள் பட்டனவும் புதியனவாகக் கட்டப்பட்டனவுமான கோவில் களில் எல்லாம் மண்டபங்களின்-கருவறைகளின் அடிப் பகுதிகளில் எல்லாம் நடன வகைகள் செதுக்கப்பட்டன. சிதம்பரம், காஞ்சி, தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், திருவண்ணுமலே முதலிய இடங்களிலுள்ள பெரிய கோவில் களேக் கூர்ந்து கவனித்து இவ்வுண்மையை அறியலாம். கூத்தியர் மட்டுமே தனித்திருந்து ஆடுதல் முதலிய ஆடல் வகைகள்-கணக்கிடற்கரிய (மிகப் பலவாகிய) நடன வகைகள்-சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. ஒவியச் சான்று _தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் புறச்சுவரில் சேரர் கால அழகிகள் நடனமாடும் ஒவியங்கள் காணப் படுகின்றன. அவர்தம் கூந்தல் ஒப்பனே, உடைச் சிறப்பு, இசைக் கருவிகள், முகப் பொலிவு, உருவ அமைப்பு இவை அனைத்தையும் அந்த ஒவியத்தில் கண்டு களிக்கலாம். கல்வெட்டுக்கள் சிறந்த சிவபக்தனை இராசராசன் தான் தஞ்சை யில் அமைத்த பெரிய கோவிலில் இசை, நடனம் ஆகிய இரண்டையும் வளர்க்கப் பதியிலார் நானூற்றுவரைப் பல கோவில்கள்லிருந்து வரவழைத்து, ஒவ்வொரு வருக்கும் ஒரு விடும், ஒரு வேலி நிலமும் அளித்தான் என்று அப் பெரிய கோவில் கல்வெட்டுப் பேசுகிறது. அம் மாதரசிகள் பல கோவில்களிலிருந்து வந்தவர்கள் என்பதை நோக்கப் பல கோவில்களிலும் கூத்தியர் இருந்தனர் என்பது பெறப்படுகிறதன்ருே திருவிடை மருதூரை யடுத்த காமரசவல்லி என்ற பதியில் சாக்கைக் கூத்தில் வல்லவன் முதலாம் இராசேந்திரன் காலத்தில்