பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடனக் கலை 87 இருந்தான். அவன் சாக்கை மாராயன்' என்ற பட்டம் பெற்றதாகக் கல்வெட்டுக் குறிக்கின்றது. எனவே, சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்ட சாக்கைக் கூத்து கி. பி. 11-ஆம் நூற்ருண்டிலும் தமிழகத்தில் இருந்தது என்பது புலகிைறதன்ருே? . இலக்கியம் சோழர் காலத்து இலக்கியங்களுட் சிறந்தன. பெரிய புராணமும் கம்பராமாயணமுமே, என்னலாம். பெரிய புராணத்தில் கடனம் தெளிவாகக் குறிக்கப் பட்டுள்ளது. ' கற்பகர்பூங் தளிரடிபோய்க் காமருசா ரிகைசெய்ய உற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடும் கைபெயரப் பொற்புறுமக் கையின்வழிப் பொருகயற்கண் புடைபெயர அற்புதப்பொற் கொடிதுடங்கி ஆடுவபோல் ஆடுவார். ' கம்பர் தம் காலத்து நடனத்தைச் சிறப்பித்த தன்மை முன்னரே கூறப்பட்டது. சோழர் காலத்திற் சிறப்பாகக் கூறத்தக்க தென்ன? கடன வகைகள் என்றும் அழியாத முறையில் கற்சுவர்களிற் செதுக்கப் பெற்றமையே சிறப்பென்னலாம். அவர்கள் காலத்தில் சைவம் நன்கு வளர்ந்ததாதலின், சமயத் தொடர்பாக நடனமும் நன்கு வளர்ந்ததென்பதை ஐயத்திற்கிடமின்றிக் கூறலாம். பிற்காலத்தில் - தமிழகப் பகுதிகள் நாயக்கராலும், மகாராட்டிரராலும் ஆளப்பட்ட காலத்தில் கருநாடக இசை தமிழகத்திற் - புகுந்தது; பரத நாட்டியம் கலை தாக்கியது. அக்காலத்தில் 12. திருநாவுக்கரசர் புராணம், 420.